»   »  முதல் முறையாக புலியில் தற்காப்புக் கலை வீரராக விஜய்

முதல் முறையாக புலியில் தற்காப்புக் கலை வீரராக விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புலி படத்தில் தற்காப்புக் கலை வீரராக வருகிறார் நடிகர் விஜய். அவர் இப்படியொரு வேடத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை என்கிறது புலி குழு.

சிம்புதேவனின் ஃபான்டசி எனும் அதிஉச்ச கற்பனைக் கதைதான் இந்த புலி. சரித்திர, புராண காலகட்டங்களைத் தாண்டிய ஒரு களத்தில் நடக்கும் கதை இது.

இந்தப் படத்தில் விஜய்க்கு இந்த வேடம், அந்த வேடம் என ஏகப்பட்ட கதைகள்.

தற்காப்புக் கலை வீரர்

தற்காப்புக் கலை வீரர்

ஆனால் படத்தின் முக்கிய பகுதி ஒன்றில் அவர் தற்காப்புக் கலை வீரராக வருகிறார். மிக ஆக்ரோஷமான சண்டைக் காட்சியில் அவர் நடிக்கிறார். இதற்காக அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தாய்லாந்திலிருந்து

தாய்லாந்திலிருந்து

தாய்லாந்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை நிபுணர் யோங் தலைமையில் சிலர் இதற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கிராஃபிக்ஸ்

கிராஃபிக்ஸ்

படத்தில் ஏராளமான கிராஃபிக்ஸுக்குகதான் வேலை அதிகம் என்கிறார்கள். இந்த விஷயத்தில் கால தாமதம் ஆகக் கூடாது என்பதால் ஏகப்பட்ட நிபுணர்களை வைத்து செய்து கொண்டிருக்கிறார்களாம்.

ஜூனில்

ஜூனில்

படத்தை விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனர். மே மாதம் படத்தின் இசை வெளியாகும் எனத் தெரிகிறது.

English summary
Now the latest in Puli is that actor Vijay is performing martial arts in a key portion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil