»   »  சிம்பு தேவன் படத்தில் 3 அடி உயர விஜய்... சீனாவில் படப்பிடிப்பு!

சிம்பு தேவன் படத்தில் 3 அடி உயர விஜய்... சீனாவில் படப்பிடிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்பு தேவன் இயக்கும் புலி படத்தில் முதல்முறையாக விஜய் 3 அடி உயரம் கொண்டவராக நடித்து வருகிறார்.

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘புலி'. படத்திற்கு இசை தேவி ஸ்ரீபிரசாத்.

படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஆந்திராவில் முடித்துவிட்டு திரும்பியுள்ளனர் படக்குழு.

பாடல்கள்

பாடல்கள்

அடுத்தகட்ட படப்பிடிப்பாக இரண்டு பாடல் காட்சிகள் ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு படமாக்கப்பட உள்ளன. ஒரு பாடல் ஹான்சிகாவுடனும், மற்றொரு பாடல் ஸ்ருதி ஹாசனுடனும் படமாக்கப்பட உள்ளது. இதற்காக சீனா அல்லது கம்போடியா செல்லும் திட்டத்தில் உள்ளனர்.

சீனாவில் கடுங்குளிர்

சீனாவில் கடுங்குளிர்

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸும், கலை இயக்குநர் முத்துராஜும் சீனா சென்று இடங்களை தேர்வு செய்ய சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். சீனாவில் அதிக குளிர் என்பதால் படப்பிடிப்புக்கு அது ஏற்றதல்ல என தெரிவிக்க தற்போது கம்போடியா என முடிவாகியுள்ளது.

அங்கோர்வாட் ஆலயத்தில்

அங்கோர்வாட் ஆலயத்தில்

கம்போடியாவில் இரண்டாம் சூரியவர்மான் கட்டிய அங்கோர்வாட் கோவிலில் படப்பிடிப்பு நடத்தலாம் என திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் சென்னையிலும் பிரம்மாண்ட செட் அமைத்து படப்படிப்பு நடத்தும் எண்ணத்திலும் படக்குழு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஜய் பிறந்த நாளில்

விஜய் பிறந்த நாளில்

மே மாதத்துக்குள் படத்தை முடித்துவிட்டு, ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

English summary
Vijay is playing as a 3 ft dwarf character in Simbu Devan directed Puli.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil