»   »  என்னை அறிந்தால் முதல் வார வசூலை முறியடித்தது புலி

என்னை அறிந்தால் முதல் வார வசூலை முறியடித்தது புலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் நடிப்பில் கடந்த 1 ம் தேதி வெளியான புலி, அஜீத்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் முதல் வார வசூலை முறியடித்திருக்கிறது.

என்னை அறிந்தால் படத்தின் இந்திய வசூல் மற்றும் உலகளாவிய வசூல் ஆகிய இரண்டையும் முறியடித்து வசூலில் சாதனை செய்திருக்கிறது புலி.


மேலும் என்னை அறிந்தால் படத்தின் தமிழ்நாட்டு வசூலை விடவும் 25 லட்சங்களை அதிகமாக வசூலித்திருக்கிறது புலி திரைப்படம்.


என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

அஜீத், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் ஆகியோரின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் என்னை அறிந்தால் திரைப்படம் வெளியானது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் கவுதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற படமாக அமைந்தது.


முதல் வாரத்தில்

முதல் வாரத்தில்

படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில் சுமார் 53.65 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. இந்தியாவில் மட்டும் 38.65 கோடிகளை முதல் 4 நாட்களில் வசூலித்து இருந்தது என்னை அறிந்தால் திரைப்படம்.


புலி

புலி

விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் கடந்த அக்டோபர் 1 ம் தேதி வெளியான புலி திரைப்படம் முதல் 4 நாட்கள் முடிவில் உலகளவில் சுமார் 64.2 கோடிகளை வசூலித்திருக்கிறது. இதன் மூலம் அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் முதல் வார வசூலை முறியடித்து இருக்கிறது புலி.


25 லட்சம்

25 லட்சம்

என்னை அறிந்தால் தமிழ்நாட்டு வசூலை விடவும், புலி 25 லட்சங்களை அதிகமாக வசூலித்து இருக்கிறது. என்னை அறிந்தால் முதல் வார இறுதியில் தமிழ்நாட்டில் 31.25 கோடிகளை வசூலித்து இருந்தது. புலி முதல் வார இறுதியில் தமிழ்நாட்டில் 31.50 கோடிகளை வசூலித்து சாதனை செய்திருக்கிறது.


பட்ஜெட் அதிகம்

பட்ஜெட் அதிகம்

புலி படம் என்னை அறிந்தால் படத்தின் வசூலை முறியடித்து இருந்தாலும் புலியை விட என்னை அறிந்தால் படத்தின் பட்ஜெட் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. என்னை அறிந்தால் படம் 50 கோடியில் எடுக்கப்பட்டு போட்ட பணத்தை முதல் வாரத்திலேயே எடுத்து விட்டது. 118 கோடியில் எடுக்கப்பட்ட புலி போட்ட பணத்தில் பாதியைத் தான் இதுவரை வசூலித்து இருக்கிறது. வரும் வாரங்களில் நிலைமை எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


English summary
Box Office: Vijay's Puli Smashed Ajith's Yennai Arindhaal Record Collection. Ajith's Yennai Arindhaal had earned Rs 53.65 crore worldwide.The worldwide collection of "Puli" in its first weekend stands at Rs 64.2 crore. Now Vijay's Puli in Box Office is Ahead of Ajith's Yennai Arindhaal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil