»   »  கசிந்தது 'புலி' விஜய் போட்டோ: அதிர்ச்சியில் இளையதளபதி, படக்குழு

கசிந்தது 'புலி' விஜய் போட்டோ: அதிர்ச்சியில் இளையதளபதி, படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் கசிந்துள்ளதால் இளையதளபதி உள்பட மொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

சிம்புதேவன் விஜய்யை வைத்து ரூ.118 கோடிக்கும் மேல் பணத்தை போட்டு எடுத்து வரும் படம் புலி. இந்த புலி வித்தியாசமான புலி பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக சொல்லி அடிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் படக்குழுவினர்.


இந்நிலையில் தான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.


புலி போட்டோ

புலி போட்டோ

புலி படத்தில் விஜய் ஒன்றுக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் வருகிறாராம். இதனால் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களை கூட வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினர்.


கசிந்தது

கசிந்தது

புலி படக்குழுவினர் பொத்தி பொத்தி வைத்த புகைபடத்தில் ஒன்று இணையதளத்தில் கசிந்துவிட்டது. படப்பிடிப்பு தளத்தில் விஜய் நடந்து வருவது போன்ற அந்த புகைப்படம் எப்படியோ கசிந்துள்ளது.


அதிர்ச்சி

அதிர்ச்சி

விஜய்யின் புகைப்படம் கசிந்துள்ளது பற்றி அறிந்து சிம்புதேவன் மற்றும் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்பட கசிவால் விஜய்யும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளாராம்.


எப்படி

எப்படி

நாம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்துள்ள போதிலும் இந்த புகைப்படம் எப்படி இணையதளத்தில் வெளியானது என்பது குறித்து படக்குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்களாம். படக்குழு இருக்கும் நிலையை பார்த்தால் புகைப்படத்தை கசியவிட்ட ஆசாமி சிக்கினால் சட்னி தான்.


விதியுலேகா ராமன்

ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருந்தனர். 6 மாதங்களாக நாங்கள் பாதுகாத்து வந்த நிலையில் கடைசி நிமிடத்தில் புகைப்படம் கசிந்துள்ளதை நினைத்து இதயம் கனக்கிறது என்று புலி படத்தில் நடித்து வரும் விதியுலேகா ராமன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Read more about: puli, vijay, புலி, விஜய்
English summary
Puli photo has got leaked in the internet which shocked Vijay and the entire team.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil