»   »  ஜிவியைக் கைவிட்ட விஜய்.... அடுத்த படத்துக்கு இசை ஏஆர் ரஹ்மான்!

ஜிவியைக் கைவிட்ட விஜய்.... அடுத்த படத்துக்கு இசை ஏஆர் ரஹ்மான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் நிரந்தரமற்றவை கூட்டணிகள். விஜய்யை லைம்லைட்டுக்கு கொண்டு வந்தவர் இளையராஜா. காதலுக்கு மரியாதையும் ப்ரெண்ட்ஸும் பாடல்களுக்காக பிரபலமானவை.

அடுத்து தேவா, எஸ் ஏ ராஜ்குமார், இமான் என கூட்டணி போட்டார் விஜய். மூடி டைப்பான விஜய் இதுவரை எந்த இசையமைப்பாளருடனும் இல்லாத அளவுக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தது ஜிவி பிரகாஷுடன்தான்.

Vijay replaces GV with AR Rahman

ஒரு ஆங்கிலப் பத்திரிகை, விஜய்க்குத் தரவேண்டிய சிறந்த நடிகர் விருதை வேறு ஒருவருக்குத் தர, உடனே பொங்கி எழு மனோகரா ரேஞ்சுக்கு ட்விட்டரில் அந்தப் பத்திரிகையை காய்ச்சித் தள்ளினார் ஜிவி.

தெறி வரை அப்படி ஒரு நெருக்கமாக இருந்த நகமும் சதையும் அடுத்த படத்தில் பிரிந்துவிட்டது.

பைரவா படத்துக்குப் பிறகு உருவாகும் இப்படத்தை தேனாண்டாள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அட்லீ இயக்கும் இந்தப் படத்துக்கு இசை ஜிவி அல்ல, அவரது மாமா ஏ ஆர் ரஹ்மான்!

விஜய் படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பது இது மூன்றாவது முறை. ஏற்கெனவே உதயா, அழகிய தமிழ் மகன் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத்தான் - எஸ்எஸ் ராஜமௌலியின் தந்தை- இந்தப் படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறார்.

English summary
Actor Vijay, director Atlee have joined hands with AR Rahman for their next venture.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil