»   »  பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12-ம் தேதியே ரிலீசாகிறது பைரவா!

பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12-ம் தேதியே ரிலீசாகிறது பைரவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 12-ம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.


Vijay's Bairava releasing on Jan 12th

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமானமுறையில் தயாரித்து வருகிறார்.


கதை, திரைக்கதை, வசனம், எழுதி - பரதன் இயக்கும் பைரவா படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார்.


இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.


இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, 'ஆடுகளம்' நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


பைரவா திரைப்படத்தின் டீசர் வெற்றிக்கு பின் பைரவா ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பைரவா ட்ரைலர் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. பைரவா ட்ரைலரை இது வரை 5மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


பைரவா திரைப்படத்தை சென்சார் குழுவினர் இன்று பார்த்து U சான்றிதழ் வழங்கியுள்ளனர். பொங்கல் விருந்தாக வருகிற January 12 தேதி திரைக்கு வருகிறது பைரவா.

English summary
Vijay's Bairava release date has been officially announced today and the film is going to release on Jan 12th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil