சரவெடி மாஸ் அப்டேட்...பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் வருது...எப்போன்னு தெரியுமா ?

சென்னை : டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் விஜய்யின் 65 வது படமான பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் லுக்கை, டைட்டிலுடன் வெளியிட்டு அசத்தியது சன் பிக்சர்ஸ். அதுவும் விஜய்யின் பிறந்தநாளன்று அடுத்தடுத்து படத்தின் ஃபஸ்ட் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

இதனை விஜய் ரசிகர்கள் திருவிழாவை போன்று கொண்டாடினர். இந்த போஸ்டர்களை அதிகமாக பகிர்ந்து பெரிய அளவில் வைரலாக்கி புதிய சாதனை படைத்தனர். குறுகிய காலத்தில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட போஸ்டராக இவை அமைந்தன.

இன்வர்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படம் சென்னை மற்றும் வெளிநாட்டு லோகேஷன்களில் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்ட ஷுட்டிங் ஜார்ஜியாவிலும், அடுத்தகட்ட ஷுட்டிங் சென்னையிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்த அப்டேட்கள்

அடுத்தடுத்த அப்டேட்கள்

இந்த படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்கிறார்கள். டைரக்டர் செல்வராகவன், மலையாள நடிகர் டாம் சாகோ ஆகிய இருவரும் வில்லன் ரோலில் நடிப்பதாகவும், மூன்றாவது வில்லன் பற்றிய அறிவிப்பு சஸ்பென்சாக வெளியிடப்படும் என்றும் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. படத்தின் நடிகர், நடிகைகள் பற்றிய அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன.

சிங்கிள் டிராக் வருதா

சிங்கிள் டிராக் வருதா

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடும் தேதி வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக தீபாவளி அன்று ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாம். அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

குட்டி ஸ்டோரியை மிஞ்சுமா

குட்டி ஸ்டோரியை மிஞ்சுமா

மாஸ்டர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் டிராக் பாடலாக வெளியிடப்பட்ட குட்டி ஸ்டோரி பாடலை போல், இந்த பாடலும் வேற லெவலில் மாஸ் ஹிட் கொடுத்து, புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா செல்லும் படக்குழு

ரஷ்யா செல்லும் படக்குழு

பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட ஷுட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஷுட்டிங் ஆகஸ்ட் 23 வரை நடைபெற உள்ளதாம். அதைத் தொடர்ந்து படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாம். அங்கு படத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட உள்ளதாம். அனேகமாக ரஷ்யாவில் நடக்க உள்ளது இறுதிக்கட்ட ஷுட்டிங்காக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

மூன்றாவது வில்லன் யார்

மூன்றாவது வில்லன் யார்

ரஷ்யாவிற்கு ஷுட்டிங் செல்வதற்கு முன் அல்லது அங்கு படப்பிடிப்பு நடைபெறும் போது அல்லது ஆயுத பூஜை போன்ற மற்றொரு முக்கிய நாளில் மூ்னறாவது வில்லன் பற்றிய மாஸ் அப்டேட்டை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசர், டிரைலர் எப்போ வரும்

டீசர், டிரைலர் எப்போ வரும்

படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் முடித்து சென்னை திரும்பிய பிறகு, தீபாவளிக்கு ஃபஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிக்கப்பட்டு, படத்தின் டீசர், டிரைலர் போன்றவைகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ரிலீஸ்

அடுத்த ஆண்டு ரிலீஸ்

மாஸ்டர் படத்தை போல் பீஸ்ட் படத்தையும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மாஸ்டர் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை மிஞ்சும் அளவிற்கு பீஸ்ட் படத்தின் வெற்றி இருக்கும் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கையாக காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X