ப்ரீ ரிலீஸ் பிசினசிலேயே வலிமை வசூலை காலி செய்த பீஸ்ட்...எத்தனை கோடி தெரியுமா?

சென்னை : படம் ரிலீசாவதற்கு முன்பு ப்ரீ ரிலீஸ் பிசினசிலேயே அஜித்தின் வலிமை பட வசூலை மிஞ்சி விட்டது விஜய்யின் பீஸ்ட். ரிலீசிற்கு முன்பே போட்ட பணத்தை எடுத்ததுடன் லாப கணக்கையும் பல கோடிகளில் துவங்கி உள்ளது பீஸ்ட் படம்.

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று விஜய்யின் பீஸ்ட். இந்த படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ள இந்த படம் தான் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ள விஜய் படமாகும். சமீபத்தில் பீஸ்ட் டிக்கெட் புக்கிங் துவங்கப்பட்டு, படுவேகமாக டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

தமிழ்நாட்டில் 900 தியேட்டர்களில் பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். 190 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பீஸ்ட் படம் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே 244 கோடிகளை வசூல் செய்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் பீஸ்ட் 75 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது. இதன் சேட்டிலைட் உரிமத்தை 40 கோடிக்கு சன் நெக்ஸ்ட் வாங்கி உள்ளது. வடஇந்திய தியேட்டர் வெளியீட்டு உரிமம் 3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வட இந்திய சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் 30 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது.

 இத்தனை கோடி வருமானமா

இத்தனை கோடி வருமானமா

பீஸ்ட் படத்தின் ஆடியோ உரிமம் 4 கோடிக்கும், வெளிநாட்டு உரிமம் 24 கோடிக்கும், தெலுங்கு தியேட்டர் உரிமம் 10 கோடிக்கும், கர்நாடக வெளியீட்டு உரிமம் 7 கோடிக்கும், கேரள வெளியீட்டு உரிமம் 6 கோடிக்கும், தென்னிந்திய டிஜிட்டல் உரிமம் 45 கோடிக்கு சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 244 கோடிகளுக்கு பீஸ்ட் வியாபாரம் ஆகி உள்ளது. இதில் பட்ஜெட் தொகையான 190 கோடி போக, 54 கோடிகளை லாபமாக பெற்றுள்ளது.

வலிமையை காலி செய்த பீஸ்ட்

வலிமையை காலி செய்த பீஸ்ட்

அஜித்தின் வலிமை படம் அமெரிக்காவில் 3.09 கோடிகளையும் , ஆஸ்தியேலியாவில் 1.16 கோடிகளையும் வசூல் செய்தது. இதை விஜய்யின் பீஸ்ட் படம் முறியடிக்கும். அமெரிக்காவில் 3.18 கோடிகளையும், ஆஸ்திரேலியாவில் 1.27 கோடிகளையும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்டே ஷோ இந்தியாவில் ஏப்ரல் 13 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஆனால் அமெரிக்காவில் ஏப்ரல் 12 ம் தேதியே பீஸ்ட் படம் ரிலீசாக உள்ளது. அதனால் அதிகமான தொகையை வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Recommended Video

விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரைடு.. 'பீஸ்ட்' படக்குழுவினருடன் ஜாலி ஜிம்கானா!
மெர்சல் சாதனையை முறியடிக்குமா

மெர்சல் சாதனையை முறியடிக்குமா

இதற்கு முன் 4 ஆண்டுகளுக்கு முன் விஜய்யின் மெர்சல் படம் தான் அமெரிக்காவில் அதிக வசூலை பெற்றது. பீஸ்ட் படம், மெர்சல் படத்தின் சாதனையை சில வாரங்களிலேயே முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் வலிமை படம் இதுவரை மொத்தமாக 232 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்த சாதனையையும் விஜய்யின் பீஸ்ட் முறியடிக்கும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X