இறுதிக்கட்டத்தை நெருங்கும் பீஸ்ட் ...அடுத்த ஷுட்டிங் இங்கு தானா ?

சென்னை : விஜய் தற்போது, கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.

பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் பீஸ்ட் படம் விஜய்யின் 65 வது படமாக தயாராகி வருகிறது. விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட் வந்தாலும், டாக்டர் படத்தின் ரிலீசுக்கு பிறகு பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இது தான் கதையா

இது தான் கதையா

தங்கம் கடத்தலை மையமாகக் கொண்டது தான் பீஸ்ட் படத்தின் கதை. இதில் வில்லனாக செல்வராகவன் நடிக்கிறார். விஜய்க்கு இந்த படத்தில் இரண்டு வில்லன்கள் என சமீபத்தில் தகவல் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி உள்ளார்.

பிறந்தநாளில் ஃபஸ்ட்லுக்

பிறந்தநாளில் ஃபஸ்ட்லுக்

பீஸ்ட் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. பிறகு சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சண்டை காட்சிகள் உள்ளிட்டவைகள் படமாக்கப்பட்டன. இதற்கிடையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் மாதம் பீஸ்ட் படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட், செகண்ட் லுக்குகள் வெளியிடப்பட்டன.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அதற்கு பிறகு படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படாததால் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்க துவங்கி விட்டனர். இதனால் தீபாவளிக்கு பீஸ்ட் படத்தின் டீசர் உள்ளிட்டவைகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் வெளியிடப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜார்ஜியா செல்லும் படக்குழு

ஜார்ஜியா செல்லும் படக்குழு

லேட்டஸ்ட் தகவலாக பீஸ்ட் படத்தின் 75 சதவீதத்திற்கும் மேலான ஷுட்டிங் நிறைவு செய்யப்பட்டு விட்டதாம். விரைவில் விஜய் உள்ளிட்ட படக்குழு மீண்டும் ஜார்ஜியா செல்ல உள்ளதாம். அங்கு க்ளைமாக்ஸ் உள்ளிட்ட முக்கிய சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தான் காரணமா

இது தான் காரணமா

முதல் கட்ட படப்பிடிப்பின் போது ஜார்ஜியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியதால் பாதியிலேயே வந்து விட்டார்களாம். அதனால் ஜார்ஜியாவில் எடுக்க திட்டமிடப்பட்டு, விட்டுப் போன காட்சிகளை எடுப்பதற்காக மீண்டும் ஜார்ஜியா செல்ல உள்ளனராம்.

அப்போ ரஷ்யா போகலையா

அப்போ ரஷ்யா போகலையா

பீஸ்ட் படத்திற்கு பூஜை போடுவதற்கு முன்பே ரஷ்யாவில் முக்கிய பகுதி ஒன்றை நெல்சன் திலீப்குமார் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இதனால் பீஸ்ட் படத்தின் க்ளைமாக்ஸ் இங்கு தான் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது உலகின் பல நாடுகளிலும் கொரோனா மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதால் ரஷ்யாவில் எடுக்க திட்டமிட்டிருந்த க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளை ஜார்ஜியாவிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X