»   »  சொன்னா சொன்னது தான், ஒழுங்கா பேச்சை கேளுங்க: அப்பாவுக்கு விஜய் கன்டிஷன்

சொன்னா சொன்னது தான், ஒழுங்கா பேச்சை கேளுங்க: அப்பாவுக்கு விஜய் கன்டிஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒழுங்காக வீட்டில் நன்றாக ஓய்வு எடுங்கள். பட வேலைகளை பின்னர் பார்க்கலாம் என்று விஜய் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கறாராக தெரிவித்துள்ளாராம்.

இளைய தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கேரள மாநிலம் குமரகோமில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்கு கடந்த மாதம் சென்றிருந்தார். அப்போது அவர் வழுக்கி விழுந்ததில் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அடிபட்டது.

Vijay's condition to father SA Chandrasekhar

இதையடுத்து கோட்டயத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து அண்மையில் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு அவர் பட வேலைகளில் ஈடுபடத் துவங்கினார்.

இதை பார்த்த விஜய் அப்பா ஒழுங்கா வீட்டில் இருந்து ஓய்வு எடுங்கள். பட வேலைகளை பின்னர் செய்யலாம் என்று கறாராக தெரிவித்துள்ளாராம். விஜய் தற்போது பைரவா படத்தில் பிசியாக உள்ளார்.

பைரவா அடுத்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

English summary
Vijay has asked his father SA Chandrasekhar to take rest and give a break to movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil