»   »  விஜய் மகளுக்கு இப்படி ஒரு திறமையா... சீக்கிரமே இறங்கி கலக்குவாராம்!

விஜய் மகளுக்கு இப்படி ஒரு திறமையா... சீக்கிரமே இறங்கி கலக்குவாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விரைவில் திரைத்துறைக்கு வரவிருக்கும் விஜய் வாரிசு. ஆனால்..!!

சென்னை : விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமான இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

விஜய்க்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருப்பது அனைவரும் அறிந்ததுதான். 'வேட்டைக்காரன்' படத்தில் மகனையும், 'தெறி' படத்தில் மகளையும் தளபதி திரையில் காட்டினார்.

விஜய்யின் மகள் திவ்யா சாஷா விஜய்யைப் போலவே செமையாக பாடுவாராம். ஆக, பாடகியாக அவரது குரலைக் கேட்கும் காலம் தொலைவில் இல்லை.

விஜய்

விஜய்

சிறு வயதில் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சின்ன வயது விஜயகாந்த் ஆகவும் நடித்திருக்கிறார் விஜய். சிறுவயதில் சினிமாவில் பாடலையும் பாடியிருக்கிறார் விஜய். 'நாளையதீர்ப்பு' படத்தின் மூலம் ஹீரோவானவர் இப்போது 62-வது படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் மகள்

விஜய் மகள்

விஜய் தனது மகன், மகள் இருவ‌ரின் புகைப்படங்களும் பத்தி‌ரிகைகளில் வெளிவருவதை விரும்பாதவர். தனது குழந்தைகளின் புகைப்படமே பத்தி‌ரிகையில் வெளிவரக் கூடாது என்பதில் கறாராக இருந்தவர் என்பதால் சினிமாவில் இப்போதே நடிக்க வைக்கமாட்டார் என பலரும் எதிர்பார்த்தனர்.

விஜய் மகன் சஞ்சய்

விஜய் மகன் சஞ்சய்

தனது மகன் சஞ்சய்யை 'வேட்டைக்காரன்' படத்தில் தன்னுடன் நடனமாட வைத்தார் விஜய். அப்போதே பட்டையைக் கிளப்பிய சஞ்சய் இப்போது படிப்பில் கவனம் செலுத்துகிறார். படிப்பு முடித்த பின்புதான் சினிமா பக்கம் இனிமேல் தலைகாட்டுவாராம்.

விஜய் மகள் திவ்யா சாஷா

விஜய் மகள் திவ்யா சாஷா

பிறகு, மகள் திவ்யா சாஷாவையும் 'தெறி' படத்தில் நடிக்க வைத்தார் விஜய். 'தெறி' படத்தில் விஜய்யின் மகளாக சிறு வயதில் நைனிகாவும், சற்று வயது கூடியதும் அந்தக் கதாபாத்திரத்தில் வருபவராக விஜய்யின் மகள் திவ்யா சாஷாவும் நடித்திருந்தனர்.

திவ்யா சாஷா

திவ்யா சாஷா

தற்போது விஜய்யின் மகள் குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. திவ்யா சாஷா தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறாராம். இவர் தளபதியை போலவே சூப்பராக பாடுவாராம். தற்போதே பல பாடல்களை நன்றாகப் பாடி கலக்குவதாக கூறப்படுகிறது. ஆக, சீக்கிரமே பாடகி அவதாரம் எடுப்பார் எனத் தெரிகிறது.

Read more about: vijay, divya, விஜய்
English summary
Vijay has a son and a daughter. Vijay's daughter Divya Saasha is currently studying sixth grade. She sings many songs very well. So it seems that soon she will sing in cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil