லீக்கானது ஜவான் படத்தின் சூட்டிங்ஸ்பாட் ஸ்டில் இல்லையாம்.. எல்லாமே போட்டோஷாப் தானாம்!
சென்னை: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டதாக ஒரு புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
Recommended Video
அதே சமயம் வாரிசு படத்தை போலவே ஜவான் படத்தின் ஸ்டில்லும் எப்படி லீக் ஆனது என்கிற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அது ஜவான் படத்தின் ஸ்டில்லே இல்லை என்றும் அது பக்காவாக ரசிகர்களால் எடிட் செய்யப்பட்ட பழைய போட்டோக்களின் தொகுப்பு என்றும் விஜய் ரசிகர்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.

லீக்கான வாரிசு ஸ்டில்ஸ்
இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் பிரத்யேக ஸ்டில்கள் பல சோஷியல் மீடியாவில் தொடர்ந்து லீக் ஆகி வருகின்றன. சமீபத்தில் கூட ராஷ்மிகா மந்தனா உடன் விஜய் நடனமாடும் ஒரு புகைப்படமும் லீக் ஆகி இருந்தது. அலா வைகுந்தபுரமுலோ படத்தில் வருவதை போல விசாகப்பட்டினம் ஹார்பரில் விஜய் சண்டைப் போட்டு சகோதரர் ஷியாமை காப்பாற்றுவது போன்ற காட்சிகளும் லீக் ஆகி இருந்தன.

ஜவான் ஸ்டில்லும் லீக்கா
விஜய் படங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெகு காலமாகவே ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது. மாஸ்டர் படம் எல்லாம் ரிலீஸ் ஆகும் முன்பே ஏகப்பட்ட காட்சிகள் வெளியாகி விட்டன. வாரிசு படத்தின் காட்சிகளும் கசிந்து வரும் நிலையில், ஜவான் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார் என புதிய ஸ்டில்லையும் விஜய் ரசிகர்கள் வெளியிட்டு நேற்று பரபரப்பை கிளப்பி விட்டனர்.

எடிட் செய்யப்பட்ட போட்டோ
ஆனால், அது உண்மையாகவே ஜவான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து க்ளிக் செய்யப்பட்ட விஜய்யின் போட்டோ இல்லை என்றும், இஃப்தார் நோன்பில் ஷாருக்கான் கலந்து கொண்டது, மாஸ்டர் லுக்கில் விஜய் இருக்கும் போட்டோ, அட்லியின் பழைய போட்டோ என மூன்று பழைய புகைப்படங்களை கச்சிதமாக வைத்து விஜய் ரசிகர் ஒருவர் பார்த்த வேலை என சக விஜய் ரசிகர்களே ஆதாரங்களும் ட்வீட் போட்டு இது போன்ற வேலைகளை செய்ய வேண்டாம் என்றும் அதை ஷேர் பண்ண வேண்டாம் என்றும் கேட்டு வருகின்றனர்.

விஜய் நடிக்கிறாரா
ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்குநர் அட்லி இயக்குவதால், நிச்சயம் இந்த படத்தில் கேமியோ ரோலில் விஜய் வந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஜவான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ரசிகர்கள் சற்றே வெயிட் பண்ணவும்!


Click it and Unblock the Notifications











