Don't Miss!
- News
பட்டாக்கத்தி..பாட்டில் வீச்சு..பட்டப்பகலில் கல்லூரி மாணவர்கள் மோதல்..பதறிய மெரீனா..4 பேர் கைது
- Finance
இந்தியாவின் முதல் பட்ஜெட்..? நிர்மலா சீதாராமன் பட்ஜெட் சாதனை..! #Budget2023
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லேடீஸ் நைட் படத்திற்காக 4 இளம் நடிகைகளை இயக்கிய விஜய்
சென்னை : விஜய், அஜித், விக்ரம் என டாப் ஹீரோக்களை இயக்கி, தமிழ் சினிமாவில் முக்கிய டைரக்டர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் டைரக்டர் ஏ.எல்.விஜய். இவர் அஜித்தை வைத்து கிரீடம், விஜய்யை வைத்து தலைவா, விக்ரமை வைத்து தெய்வ திருமகள், ஆர்யாவை வைத்து மதராசபட்டினம் ஆகிய படங்களை இயக்கினார்.
லைட்டா கண்ணு தெரியாது.. கண்ணாடியுடன் கலக்கலாக போஸ் கொடுத்த டிடி.. வேற லெவல் க்யூட்னஸ்!
சமீபத்தில் கங்கனா ரணாவத்தை வைத்து ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தலைவி படத்தை இயக்கி முடித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.

விரைவில் தலைவி ரிலீஸ்
தமிழக தேர்தல், கொரோனா பரவல், தியேட்டர்கள் மூடல் உள்ளிட்ட பல காரணங்களால் அடுத்தடுத்து தலைவி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் லாக்டவுன் முடிந்த பிறகு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் அரவிந்த் சாமி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அடுத்த படத்தையும் முடித்த விஜய்
அதே சமயம், தலைவி படத்துடன் சேர்த்து தனது அடுத்த படத்தையும் எடுத்து முடித்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு அக்டோபர் 31 லேடீஸ் நைட் என பெயரிட்டுள்ளாராம். பயங்கர த்ரில்லர்,ஹாரர் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

4 ஹீரோயின்களை இயக்கிய விஜய்
இந்த படத்தில் 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனராம். மேகா ஆகாஷ், மஞ்சிமா மோகன், நிவேதா பேதுராஜ், ரிபா மோனிகா ஜான் ஆகியோருடன் புதுமுக நடிகை ஒருவரும், தெலுங்கு ஹீரோ விஷாக் சென் ஆகியோரும் நடித்துள்ளனர்.
Recommended Video

ஹாலோவென் பார்ட்டி தான் படமே
நண்பர்கள் இடையே நடக்கும் ஹாலோவென் பார்ட்டியில் விளையாட்டாக செய்யும் காரியம் தவறாக முடிவதும், ஒரு இரவில் நடக்கும் நிகழ்வுகளும் தான் படத்தின் கதை. ஹாலோவென் பார்ட்டியை மையமாக வைத்தே இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

விரைவில் ஓடிடி ரிலீஸ்
பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள அக்டோபர் 31 லேடீஸ் நைட் படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். முன்னணி ஓடிடி தளம் ஒன்றில் விரைவில் இந்த படம் ரிலீசாகும் என கூறப்படுகிறது.