TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
விஜய் பட கதை இப்படி கசிந்துவிட்டதே: முருகதாஸ் செம டென்ஷன்
சென்னை: விஜய்யை வைத்து தான் எடுத்து வரும் படத்தின் கதை கசிந்துவிட்டதால் இயக்குனர் முருகதாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
ஏ.ஆர். முருகதாஸ், விஜய் மீண்டும் சேர்ந்துள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கதை கசிவு
முருகதாஸ் சந்தோஷமாக பூஜைபோட்டு படத்தை துவங்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இணையதளங்களில் அவர் படத்தின் கதை கசிந்துவிட்டது.
கதை என்ன?
படத்தில் வில்லன் டோட்டா ராய் சௌத்ரி ஒரு சர்வதேச குற்றவாளியாம். வில்லன் கொல்கத்தாவில் குண்டு வைக்க வரும் தகவல் கிடைத்த போலீஸ் விஜய் உதவியுடன் அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறது.
இரண்டு விஜய்
சிறையில் இருந்து தப்பிக்கும் வில்லன் தன்னை பிடித்துக் கொடுத்த விஜய்யை பழிவாங்க தேடி சென்னை வருகிறார். வந்த இடத்தில் இரண்டு விஜய் இருப்பதை தெரிந்து கொள்கிறார்.
கிளைமாக்ஸ்
தன்னை பிடித்துக் கொடுத்த விஜய்யை கண்டுபிடித்து அவர் பழிவாங்குகிறாரா? அவரிடம் இருந்து விஜய் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதையாம்.
அதிர்ச்சி
படம் துவங்கிய வேகத்தில் இப்படி கதை இணையதளங்களில் கசிந்துவிட்டதே என்று முருகதாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். கதையை யார் கசியவிட்டார்கள் என்று விசாரித்து வருகிறாராம். மேலும் கதையில் சில மாற்றங்கள் செய்ய தீர்மானித்திருக்கிறாராம் முருகதாஸ்.