»   »  விஜய்யின் அடுத்த படத்தை தயாரிப்பது இவங்கதான்.. டைரக்‌ஷன் அட்லீயா?

விஜய்யின் அடுத்த படத்தை தயாரிப்பது இவங்கதான்.. டைரக்‌ஷன் அட்லீயா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்த நிறுவனத்தின் 100-வது தயாரிப்பில் விஜய் நடிக்க போகிறாரா..?

சென்னை : நடிகர் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவருகிறார்.

அதை முடித்தபிறகு விஜய் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் நடிக்கவுள்ளார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய்யின் 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' ஆகிய படங்களை இந்த நிறுவனம் இதற்குமுன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்குட் பிலிம்ஸ்

சூப்பர்குட் பிலிம்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ். இந்நிறுவனம் விரைவில் தனது 100-வது படத்தை தயாரிக்க உள்ளது. இதில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் சம்மதம்

விஜய் சம்மதம்

இதுதொடர்பாக விஜய்யிடம் பேசியிருப்பதாகவும், அவரும் சம்மதம் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது விஜய்க்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுப்பதில் இந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறதாம்.

ஹிட் படங்கள்

ஹிட் படங்கள்

நடிகர் ஜீவாவின் அப்பா ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த, 'பூவே உனக்காக', 'லவ் டூடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி' 'ஜில்லா' போன்ற படங்களில் விஜய் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அட்லீ?

இயக்குநர் அட்லீ?

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் விஜய், அதை முடித்ததும், சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தில் இணைவார் என தெரிகிறது. இப்படத்தை அட்லி இயக்கலாம் என கூறப்படுகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

English summary
Actor Vijay is currently acting in a film produced by Sun Pictures. This film is directed by AR Murugadas. After completing it, Vijay will be acted in Super good films 100th film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil