»   »  பழனி கோயிலில் மாறு வேஷம்.... அது விஜய்யே இல்லையாம்!

பழனி கோயிலில் மாறு வேஷம்.... அது விஜய்யே இல்லையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் சமீபத்தில் பழனி கோவிலுக்கு மாறுவேடத்தில் சென்று தரிசனம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வெளிவந்தது.

அந்தப் புகைப்படத்தில் முகத்தை காவித் துண்டால் மறைத்தபடி, கண்ணாடி அணிந்து விஜய்யைப் போலவே ஒருவர் காவி வேஷ்டியுடன் நடந்து வருவார். இதைப் பார்த்ததும் விஜய்தான் பழனி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ததாக செய்தி பரவியது.

Vijay's Pazhani Temple visit pics is fake

இப்போது அந்த புகைப்படத்தில் இருந்தது விஜய் இல்லை, வேறொருவர் என்பது தெரியவந்துள்ளது. அதற்கான படம் ஒன்றும் சமூக வலைத் தளத்தில் வெளியாகியுள்ளது. விஜய் சர்வ மதங்களையும் சமமாகப் பாவிப்பவர். இதற்கு முன்பும் கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

English summary
Recently one of Vijay Pazhani Dharshan pics gone viral in media, but now sources confirmed it is fake one.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil