»   »  குழந்தைகளைக் கவர்வதற்கு ஒரு கேரக்டர்... 'தளபதி'யின் பலே ஐடியா!

குழந்தைகளைக் கவர்வதற்கு ஒரு கேரக்டர்... 'தளபதி'யின் பலே ஐடியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குழந்தை ரசிகர்களைக் கவர்ந்தால் போதும்... தமிழ் சினிமாவின் தலையாய ஹீரோவாக நீடிக்கலாம். எந்தப் படமாக இருந்தாலும் சூப்பர் ஹிட் அடிக்கும்.

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கு பிடித்த முதல் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே... அவரது ஸ்டைலுக்கு நான்காவது தலைமுறை குழந்தைகள், சிறுவர்கள் கூட ரசிகர்களாக இருக்கின்றனர்.

Vijay's plan to attract children

ரஜினி வழியைப் பின்பற்றி குழந்தை ரசிகர்களைக் கவர எல்லா ஹீரோக்களுமே முயல்கிறார்கள். அதில் விஜய் ஓரளவு வெற்றியும் பெற்றார். ஆனால் சிவகார்த்திகேயனின் வரவு விஜய்யை வெகுவாக பாதித்தது. எனவே தனது படங்களில் குழந்தைகளுக்கான கண்டெண்ட் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். தெறி பார்த்தவர்களுக்கு இது புரியும்.

விஜய் அடுத்து நடிக்கும் அட்லீ படத்தில் ஒரு கேரக்டரே குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இரண்டு மகன் விஜய்களில் ஒரு விஜய் மருத்துவர். இன்னொரு விஜய் மேஜிஷியன். குழந்தைகளைக் கவர பல மேஜிக்குகளை செய்ய உள்ளார். முக்கியமாக க்ளைமாக்ஸ் காட்சியில் வயிற்று வலி வரும் அளவுக்கு சிரிக்க வைக்குமாம் இந்த கேரக்டர்.

பதிலுக்கு சிவா என்ன யோசிச்சு வெச்சுருக்காப்ல?

English summary
Vijay has planned to attract his children fans by a magician character in his upcoming film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil