»   »  விக்ரம் பிரபுவின் நெருப்புடாவுக்கு விளம்பரம் தேடித் தந்த விஜய்

விக்ரம் பிரபுவின் நெருப்புடாவுக்கு விளம்பரம் தேடித் தந்த விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் பிரபுவின் நெருப்புடா படத்திற்கு தளபதி விஜய் விளம்பரம் தேடிக் கொடுத்துள்ளார்.

அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு தயாரித்து நடித்துள்ள படம் நெருப்புடா. நெருப்புடா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

Vijay's poster helps Neruppuda team

கபாலி படத்தில் வந்த நெருப்பு டா பாடலில் இருந்து தான் விக்ரம் பிரபுவின் படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். தீயணைப்புத் துறை வீரர்களுக்கு இந்த படத்தை சமர்ப்பணம் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் படத்திற்கு தளபதி விஜய் விளம்பரம் தேடிக் கொடுத்துள்ளார். இது குறித்து விக்ரம் பிரபு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நெருப்புடா ப்ரொமோஷன்ஸ் நடந்து கொண்டிருக்கும்போது மெர்சலின் போஸ்டரை ரீபோஸ்ட் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Vijay has helped Neruppuda team in their promotions. Vikram Prabhu tweeted that, 'With all the #Neruppuda promotions going on couldn't help but repost this poster of #Mersal ! Loving the 🔥🔥🔥🔥😉😄'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X