»   »  "கிக்" டிரெய்லரின் "லைக்" வரலாற்றை முறியடித்த "புலி"

"கிக்" டிரெய்லரின் "லைக்" வரலாற்றை முறியடித்த "புலி"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் வெளியான விஜயின் "புலி" டிரெய்லர் இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் "நம்பர் 1" டிரெய்லராக மாறியிருக்கிறது.

மேலும் இதுவரை இந்தியாவின் அதிகம் விரும்பப்பட்ட டிரெய்லராக இருந்து வந்த சல்மான் கானின் "கிக்" பட வரலாற்றையும் "புலி" டிரெய்லர் முறியடித்திருக்கிறது.


தற்போது இந்த சாதனையை #pulimostlikedindiantrailer என்ற ஹெஷ்டேக் போட்டு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.


புலி டிரெய்லர்

புலி டிரெய்லர்

விஜயின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான "புலி" படத்தின் டிரெய்லரை யூடியூபில் இதுவரை 6,188,535 பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். மேலும் புலி டிரெய்லர் வெளியான உடன் மிகக்குறைந்த தினங்களில் மிகவும் அதிகமான பேர் பார்த்து ரசித்த ஒரு டிரெய்லராகவும் மாறியது.


பஜ்ரங்கி பைஜான்

பஜ்ரங்கி பைஜான்

ஏற்கனவே புலி டிரெய்லர் சல்மான்கானின் பஜ்ரங்கி பைஜான் படத்தின் வரலாற்றை முறியடித்திருந்தது. பஜ்ரங்கி பைஜானை விடவும் அதிகமான லைக்குகள் மற்றும் பார்வைகளை புலி டிரெய்லர் பெற்றிருக்கிறது.


கிக் vs புலி

கிக் vs புலி

தற்போது சல்மான் கானின் மற்றொரு படமான கிக் படத்தின் வரலாற்றையும் முறியடித்து சாதனை செய்திருக்கிறது விஜயின் புலி டிரெய்லர்.இதுவரை இந்தியாவின் அதிகம் விரும்பப்பட்ட டிரெய்லராக இருந்து வந்த சல்மான் கானின் "கிக்" பட வரலாற்றை தற்போது "புலி" டிரெய்லர் முறியடித்திருக்கிறது. கிக் பட டிரெய்லரை இதுவரை சுமார் 1,01,934 பேர் யூ டியூபில் லைக் செய்திருக்கின்றனர்.. தற்போது புலி டிரெய்லர் அதனை முறியடித்திருக்கிறது,1,04, 556 பேர் இதுவரை புலி டிரெய்லரை யூ டியூபில் லைக் செய்திருக்கின்றனர் . கிக் டிரெய்லரை லைக் செய்தவர்களை விடவும் புலி பட டிரெய்லரை சுமார் 2500 பேருக்கும் அதிகமான பேர் லைக் செய்திருக்கின்றனர்.


சல்மானின் வரலாற்றை முறியடித்த விஜய்

சல்மானின் வரலாற்றை முறியடித்த விஜய்

புலி டிரெய்லரை இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இது இந்திய சினிமா உலகில் பெரிய சாதனையாக கூறப்படுகிறது. இதுவரை பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘கிக்' படம்தான் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருந்தது. தற்போது ‘புலி' படத்தின் டிரைலர் அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சல்மான்கானின் பட வரலாற்றை முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார் நடிகர் விஜய்.


கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

தங்கள் மனங்கவர்ந்த நடிகரின் டிரெய்லர் பாலிவுட் முன்னணி நடிகரின் வரலாற்றை முறியடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே #pulimostlikedindiantrailer என்ற ஹெஷ்டேக்கை போட்டு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.


அக்டோபர் 1

அக்டோபர் 1

அக்டோபர் 1 ம் தேதி புலி திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. இந்தியா முழுவதும் சுமார் 4000 க்கும் அதிகமான திரையரங்குகளில் புலியை வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன. இன்னும் 10 தினங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது அடுத்தடுத்த கொண்டாட்டங்களுக்கு விஜய் ரசிகர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.


புலி டிரெய்லர் - சாதனை மேல் சாதனை...English summary
Puli, the upcoming film of Actor Vijay, has become the most liked Indian film trailer on YouTube.The trailer has been seen over 6 million times and has garnered over 1 lakh 'likes' on YouTube so far. The 'likes' for the trailer are more than Bollywood superstar Salman Khan's Kick, which so far held the record for the highest 'likes' on the video-sharing website.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil