»   »  'புலி'க்கு முன்னால் தாக்குப் பிடித்து நிற்குமா 'சிவமும், சிங்கும்'...?

'புலி'க்கு முன்னால் தாக்குப் பிடித்து நிற்குமா 'சிவமும், சிங்கும்'...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் ஆக்க்ஷன் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியிருக்கும் புலி திரைப்படம் நாளை மறுநாள் (அக்டோபர் 1) வெளியாகிறது.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது புலி திரைப்படம். இந்நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் புலி படத்திற்கு போட்டியாக அந்தந்த மொழிகளில் வெளியாகும் படங்கள் மாறியுள்ளன.


ஹிந்தியில் அக்சய் குமாரின் "சிங் இஸ் ப்ளிங்" திரைப்படமும், தெலுங்கில் இளம் நடிகர் ராமின் "சிவம்" திரைப்படமும் அக்டோபர் 2 ம் தேதி வெளியாகின்றன.


புலி

புலி

சுமார் 118 கோடி ரூபாய் பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் ஆக்க்ஷன் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியிருக்கும் புலி திரைப்படம் நாளை மறுநாள் (அக்டோபர் 1)வெளியாகிறது. தமிழில் நேரடித் திரைப்படமாக வெளியாகும் புலி ஹிந்தி, மலையாளம், மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
சிங் இஸ் ப்ளிங்

சிங் இஸ் ப்ளிங்

அக்சய் குமார், ஏமி ஜாக்சன், லாரா தத்தா மற்றும் ஏராளமான ஹிந்தி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் சிங் இஸ் ப்ளிங் திரைப்படம், அக்டோபர் 2 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.சுமார் 80 கோடி பட்ஜெட்டில் ஆக்க்ஷன் கலந்த காமெடிப் படமாக சிங் இஸ் ப்ளிங்கை உருவாக்கி இருக்கிறார் பிரபுதேவா.


விஜய் vs அக்சய் குமார்

விஜய் vs அக்சய் குமார்

ஹிந்தி மொழியில் புலி திரைப்படம் வெளியாகும் மறுநாள் அக்சய் குமாரின் சிங் இஸ் ப்ளிங் திரைப்படம் வெளியாகிறது. பிரபுதேவா இயக்கியிருக்கும் இப்படம் விஜயின் புலிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் தொடர்ந்து 3 ஹிட் படங்கள் கொடுத்து வசூல் மன்னனாக திகழ்கிறார் அக்சய் குமார்.


சிங்கத்தை வெல்லுமா

சிங்கத்தை வெல்லுமா

சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்திப்பதற்கு ஒப்பானது ஹிந்தியில் புலி திரைப்படம் அக்சய் குமாரின் திரைப்படத்துடன் மோதுவது. விஜய் நடிப்பில் முதன்முறையாக ஹிந்தியில் வெளியாகும் படம் புலி என்பது மைனஸாக மாறினாலும், படத்தில் ஸ்ரீதேவி இருப்பது புலிக்கு ஒரு பிளஸாகத் திகழ்கிறது.


போட்டி கடுமையாக

போட்டி கடுமையாக

அக்சய் குமார் தொடர்ந்து 4 வது ஹிட் கொடுக்க முயலும் அதே நேரத்தில், முதன்முறையாக ஹிந்தி மொழியில் அடியெடுத்து வைக்கும் விஜய் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே பார்ப்பார். இதன் மூலம் பாக்ஸ் ஆபீஸில் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவம்

சிவம்

ஹிந்தி மொழியில் அக்சய் குமார் என்றால் தெலுங்கில் இளம் நடிகர் ராமின் நடிப்பில் சிவம் திரைப்படம் வெளியாகிறது. இவரின் முந்தைய படங்களான மசாலா, பண்டக செஸ்கோ போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மினிமம் மினிமம் வசூலைக் குவித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தேவி ஸ்ரீ பிரசாத்

தேவி ஸ்ரீ பிரசாத்

சிவம் மற்றும் புலி ஆகிய 2 படங்களுக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சிவம் படத்தின் பாடல்கள் மாபெரும் ஹிட் பாடல்களாக தெலுங்கு தேசத்தில் மாறியிருக்கிறது.


விளம்பரம்

விளம்பரம்

சிவம் படத்தை நல்ல முறையில் விளம்பரம் செய்து வெளியிடவிருக்கின்றனர். மேலும் தெலுங்கு மக்களுக்கு பிடித்த ஆக்க்ஷன், பேமிலி செண்டிமெண்ட் மற்றும் காதல் எல்லாமே படத்தில் தூக்கலாக இருக்கின்றன என்று கூறுகிறார்கள். புலி படத்துடன் சிவத்தை ஒப்பிட முடியாது எனினும்
சிவம் நேரடித் தெலுங்குப் படமென்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கொடி நாட்டுவாரா?

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கொடி நாட்டுவாரா?

தமிழில் விஜயின் ஆதிக்கம் பாக்ஸ் ஆபிசில் அதிகம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதே போல தெலுங்கு மற்றும் ஹிந்தி பாக்ஸ் ஆபீஸையும் விஜய் அடித்து நொறுக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


English summary
Vijay's Puli" is a fantasy-adventure film written and directed by Chimbu Deven. The movie is being released in Tamil, Telugu and Hindi around the world on 1 October. Now Vijay's 'Puli' to clash with Ram's 'Shivam' Akshay's 'Singh Is Bling' at box office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil