»   »  வாழ்க்கையில் ஆயிரம் தடைகளப்பா - விஜயைத் தாங்கிப்பிடிக்கும் ரசிகர்கள்

வாழ்க்கையில் ஆயிரம் தடைகளப்பா - விஜயைத் தாங்கிப்பிடிக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று காலையில் இருந்து நடிகர் விஜய், தயாரிப்பாளர் தாணு மற்றும் புலி படக்குழுவினரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

நாளை விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புலி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இந்த சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் இதனையும் சாதகமாக்கிய விஜய் ரசிகர்கள் புலி படத்திற்கு இலவச விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்த வருமான வரித்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் #ThanksITDepartmentForPuliPromotion என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி, நன்றி சொல்லிவருகின்றனர்.

வாழ்க்கையில் ஆயிரம்

பிரபல செய்தி சேனலில் சூப்பர் ஸ்டார் வீட்டில் ரெய்டு என்று பிளாஷ் ஓடியதை சுட்டிக்காட்டி "வாழ்க்கையில் ஆயிரம் தடைகளப்பா தடைகளும் உனக்கொரு படிக்கல்லப்பா" என்று விஜய்க்கு சப்போர்ட் செய்திருக்கிறார் விவேக் என்னும் ரசிகர். இதே செய்தியை பலரும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி பாணியில்

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தனி ஒருவன் திரைப்படப் பாணியில் ஜெயம் ரவி சொல்வது போன்று " இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல முதல் பக்கத்துல விஜய் வீட்ல ரெய்டுன்னு போட்டிருக்கு என்னன்னு பார்த்தா 4 வது பக்கத்துல புலி திரைப்படம் நாளைக்கு ரிலீஸ்னு போட்டிருக்கு" என்று கூறியிருக்கிறார் தி பாஸ் கிர்திவ்.

எஸ்கேடி ஸ்டுடியோஸ்

"புலி நாளைக்கு வெளியாகுதுன்னு மேற்கு வங்காளம் வரைக்கும் செய்தி போயிருக்கு எஸ்கேடி ஸ்டுடியோஸ் கூட இவ்வளவு விளம்பரம் பண்ணலையே" என்று கேட்டிருக்கிறார் புலி கவுதம்.

பாகுபலி பாணியில்

பாகுபலி பாணியில் புலி நிறுவனம் செய்த விளம்பரத்தை விடவும் அரசாங்கம் செய்த விளம்பரமே புலியை மகளிடம் முறையாக கொண்டு சேர்த்தது என்று வருமான வரித்துறையினருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஜார்ஜ்.

இதைப் போன்ற மேலும் பல ட்வீட்களால் நிரம்பி வழிகின்றது #ThanksITDepartmentForPuliPromotion ஹெஷ்டேக்.

Read more about: vijay, puli, விஜய், புலி
English summary
Actor Vijay's Home Raided by Income Tax Department, Now Vijay Fans Say Thanks For income Tax Department Regarding Puli Free Promotions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil