»   »  தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் நாளை வெளியாகிறது விஜயின் புலி

தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் நாளை வெளியாகிறது விஜயின் புலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தமிழ்நாடு முழுவதும் இன்று வெளியான விஜயின் புலி திரைப்படம் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் நாளை வெளியாகிறது.

Select City
Buy Chiruthai Puli (U/A) Tickets

இன்று காலையில் வெளியாகவிருந்த புலி திரைப்படம் பணப்பிரச்சினைகளால் தள்ளிப் போய் சற்று தாமதமாக வெளியானது. இதே போன்று பணப்பிரச்சினையின் காரணமாக ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் புலி திரைப்படம் வெளியாகவில்லை.இதனை அதிகாரப்பூர்வமாக ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் ட்விட்டரில் அறிவித்து இருக்கின்றனர். மேலும் அவர்கள் கூறும்போது விஜய் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே படம் நாளை வெளியாகும் என்று வெளிப்படையாக தெரிவித்து இருக்கின்றனர்.


புலி படத்தின் தெலுங்கு உரிமை மட்டுமே சுமார் 8 கோடிகளுக்கும் அதிகமாக விலை போனது.2 மாநிலங்களிலும் சேர்த்து 400 திரையரங்குகளில் புலி படத்தினை திரையிட விநியோகஸ்தர்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக புலி படம் இன்று தள்ளிப் போயிருக்கிறது.


சுமார் 60% டிக்கெட்டுகள் இன்றைய காட்சிக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததாகவும், இன்று படம் திரையிடப்படாததால் பணத்தை ரசிகர்களிடம் திரும்பக் கொடுத்து விட்டதாகவும் ஆந்திர, தெலுங்கானா மாநில திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.


பிரச்சினைகள் தீர்ந்து நாளை புலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா? என்று தெலுங்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.


English summary
Telugu version of Vijay's "Puli", has been delayed by a day in Andhra Pradesh and Telangana due to financial problems."Puli Telugu release: Already distributors confirmed that No Shows for Today. Theater's issuing refunds. Only If Vijay steps in.. Tomorrow," says Andhra Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil