For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தளபதி 66 படத்தின் டைட்டில் ’வாரிசு’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  |

  சென்னை: நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியாகி உள்ளது.

  ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, மெஹ்ரின் பிர்சடா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

  அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ரஜினிகாந்தை சந்தித்தாரா பிரசாந்த் நீல்? கேஜிஎஃப் அளவுக்கு ஒரு பிரம்மாண்ட கதை சொல்லி இருக்காராம்!ரஜினிகாந்தை சந்தித்தாரா பிரசாந்த் நீல்? கேஜிஎஃப் அளவுக்கு ஒரு பிரம்மாண்ட கதை சொல்லி இருக்காராம்!

  மிஸ்ஸான மாஸ்டர்

  மிஸ்ஸான மாஸ்டர்

  கொரோனா காலத்தில் 50சதவீத இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க முடியாமல் திணறியது. ஆனால், பல பெரிய படங்கள் ரிலீசாக தியேட்டர் கதவுகளை திறந்து மக்களை தியேட்டருக்கு வரவைத்த மேஜிக் செய்த மாஸ்டர் மேஜிக் காட்டியது. ஆனாலும், வசூல் அளவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டரை அந்த படம் பண்ணவில்லை.

  உயர பறக்காத பீஸ்ட்

  உயர பறக்காத பீஸ்ட்

  கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு வெற்றிகளுடன் ஹாட்ரிக் அடிப்பார் இயக்குநர் நெல்சன் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இதுவரை பார்க்காத ரா ஏஜென்ட்டாக அதிலும் ஃபைட்டர் ஜெட் ஓட்டும் வீரராக காட்டி இருந்தார். ஆனால், திரைக்கதையில் அதற்கான வலு சேர்க்காத நிலையில், ட்ரோல் செய்யப்பட்டு கேஜிஎஃப் 2 எனும் மான்ஸ்டருக்கு முன்னால் உயர பறக்க முடியாமல் போய் விட்டது.

  ஜாலியா ஒரு படம்

  ஜாலியா ஒரு படம்

  தளபதி 66 படத்தை அதற்காக வெறித்தனமாக எடுத்து வெற்றி பெறவேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. இயக்குநர் வம்சி சொன்ன கதை பிடித்துப் போனதும், குடும்ப ரசிகர்களை தொடர்ந்து கைவசம் வைத்திருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்ட நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

  வாரிசு

  வாரிசு

  இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தற்போது டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'வாரிசு' என டைட்டில் வைத்துள்ளனர். வழக்கம் போல நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

  லீக் ஆகிடுச்சே

  லீக் ஆகிடுச்சே

  ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னரே வாரிசு என்கிற டைட்டில் லீக் ஆனது. கடைசி நேரத்தில், வம்சம் என இன்னொரு டைட்டிலும் வலம் வந்தது. இந்நிலையில், லீக்கான அதே டைட்டிலை அதிகாரப்பூர்வமாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். ரஜினிகாந்தின் அடுத்த வாரிசு படத்தில் இருந்து உருவிட்டாங்களா? என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

  கபாலி பிளஸ் சிவாஜி

  கபாலி பிளஸ் சிவாஜி

  தி பாஸ் இஸ் பேக் என சிவாஜி படத்தில் இருந்து பாஸையும், கபாலி படத்தில் ரஜினிகாந்த் அணிந்திருந்த கோட்டையும் உருவி நடிகர் விஜய்யின் வாரிசு ஃபர்ஸ்ட் லுக்கை ரெடி செய்து விட்டாரா வம்சி என இப்பவே ட்ரோல் செய்யவும் அஜித் ரசிகர்கள் கிளம்பி விட்டனர். மகேஷ் பாபு படங்களில் வெளிநாட்டில் இருந்து ஒவ்வொரு முறையும் அவர் இந்தியாவுக்கு வருவார். அதே போல இந்த படத்தில் விஜய்யை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருபவராக வம்சி எடுத்து வைக்கப் போகிறார் என்றும் கதை பற்றிய விவாதங்களும் பறக்கின்றன.

  English summary
  Actor Vijay's Thalapathy 66 titled announced officially now by the makers of Thalapathy 66. Vijay fans got a super birthday gift from the actor himself.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X