Don't Miss!
- News
பரந்தூர் ஏர்போர்ட் உறுதி.. பிரச்சனையை தமிழ்நாடு அரசுதான் தீர்க்கனும்: மத்திய அமைச்சர் சிந்தியா
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Sports
சுப்மன் கில் தான் தொடக்க வீரர்..ராகுல் அந்த பணியை செய்ய மாட்டாரா? முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாடல்
- Technology
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விறுவிறு சுறுசுறு சூட்டிங் துவக்கம் .. தளபதி 67 படம் எப்ப ரிலீஸ் பிளான் தெரியுமா?
சென்னை : நடிகர் விஜய் எப்போதுமே ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவர் என்பதை சொல்ல தேவையில்லை.
தன்னுடைய தொழிலை மிகவும் நேசிக்கும் விஜய் அடுத்தடுத்த வித்தியாசமான இயக்குனர்களின் கைவண்ணத்தில் வித்தியாசமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
இன்னும் சில தினங்களில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
800
கோடி
எங்கே..
187
கோடி
எங்கே..
சூப்பர்ஸ்டார்
ஆக
ஆசைப்படலாமா
விஜய்..
மீசை
ராஜேந்திரன்
விளாசல்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய் சினிமா காதலராகவும் சிறந்த நடிகராகவும் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். சிறுவயதில் துவங்கிய இவரது திரைப்பயணம் தற்போது வரை நீண்டு வருகிறது.. தான் நேசிக்கும் சினிமாவிற்காக அவர் அதிகமான மெனக்கடல்களை தொடர்ந்து செய்து வருகிறார். ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

வாரிசு படம்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் வாரிசு படம் உருவாகியுள்ளது. குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார். அடுத்தடுத்த வெற்றிகளை சாத்தியப்படுத்தினாலும் விஜய்க்கு கடந்த பீஸ்ட் படம் சொதப்பலாகவே அமைந்தது. இதனிடையே வாரிசு படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்நோக்கியுள்ளனர்.

தளபதி 67 படம்
வாரிசு படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தற்போது மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள தளபதி 67 படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்த விஜய், தற்போது அவருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எகிறி உள்ளது.

சென்னையில் துவங்கிய சூட்டிங்
இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கி உள்ள நிலையில் அடுத்ததாக காஷ்மீருக்கு படக்குழு பயணம் செய்ய உள்ளது. அங்கு 50 நாட்கள் ஷூட்டிங் நடத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தில் ப்ரீ ரிலீஸ் வியாபாரமும் களைகட்டியுள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங்கை வரும் மே மாதத்திற்குள் முடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரிலீஸ் திட்டம்
இதனிடையே படத்தை அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஆயுத பூஜை அல்லது தீபாவளி பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்யவும் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தீபாவளியில் விஜய்யின் மாஸ் படம் வெளியாவது ரசிகர்களுக்கு கண்டிப்பான சந்தோஷத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

விஜய்க்கு த்ரிஷா ஜோடி?
விஜய் படங்கள் என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. அதிலும் தளபதி 67 படம் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த எதிர்பார்ப்புடன் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.