தளபதி 67 டைட்டில் லியோ... வெல்கம் ட்வீட் செய்த CSK.. விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்?

சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தின் டைட்டில் ப்ரோமோவுடன் வெளியானது.

அதன்படி, இதுவரை தளபதி 67 என அழைக்கப்பட்ட இந்தப் படம் இனிமேல் லியோ என பெயர் மாறியது.

விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவதாக இணைந்துள்ள இத்திரைப்படம் LCU கான்செப்ட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் தளபதி 67 டைட்டில் லியோவுக்கு வாழ்த்துக் கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

 ட்ரெண்டாகும் லியோ

ட்ரெண்டாகும் லியோ

விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கும் உடனடியாக தொடங்கப்பட்டது. மேலும், கடந்த மூன்று தினங்களாக அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு அசத்தி வருகிறது படக்குழு. இந்நிலையில், தளபதி 67 டைட்டில் லியோ என ப்ரோமோவுடன் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து லியோ என்ற டைட்டில் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.

 படக்குழுவுக்கு வாழ்த்து

படக்குழுவுக்கு வாழ்த்து

தளபதி 67 டைட்டில் ப்ரோமோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தளபதி 67 டைட்டில் லியோ என அறிவிக்கப்பட்டதும் திரை நட்சத்திரங்களும் ரசிகர்களும் படக்குழுவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். டைட்டில் ப்ரோமோவுடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட்

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் லியோ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. தோனி தலைமையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சிஎஸ்கே அணியின் லோகோவில் சிங்கம் இருக்கிறது. அதன் பெயரான Leo-வை குறிப்பிட்டு தான் அப்படி ட்வீட் செய்துள்ளது சிஎஸ்கே அணி நிர்வாகம். அதேபோல் சிஎஸ்கே அணியின் ட்விட்டர் அட்மின் பெயரும் Leo என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு ட்வீட்டில் சிஎஸ்கேவின் லோகோவில் இருக்கும் பிளடி ஸ்வீட் என்ற கேப்ஷனை லியோ டீம் கூறியதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளது.

 விஜய் - தோனி கூட்டணி?

விஜய் - தோனி கூட்டணி?

முன்னதாக பீஸ்ட் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை தோனி நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோஸ் வைரலாகியிருந்தது. இதனையடுத்து தோனி தற்போது சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தோனியின் தயாரிப்பில் விஜய் விரைவில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே விஜய்யின் லியோ படக்குழுவுக்கு சியர்ஸ் செய்யும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட் செய்துள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X