தளபதி 67 டைட்டில் லோடிங்... நாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம்... வெறித்தனம் தான் போங்க
சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
முதற்கட்டமாக தளபதி 67ல் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய தகவல்களை படக்குழு வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து பூஜை வீடியோ, சாட்டிலைட் ரைட்ஸ், ஓடிடி உரிமை ஆகியவைகள் குறித்தும் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தற்போது தளபதி 67 படத்தின் டைட்டில் பற்றி படக்குழுவினர் தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

தளபதி 67 டைட்டில் லோடிங்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே சென்னையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக தளபதி 67 அப்டேட்கள் தான் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது தளபதி 67 டைட்டில் லோடிங் என படக்குழு அடுத்த ஒரு முக்கியமான அப்டேட்டை கொடுத்துள்ளது.

நாளை மாலை டைட்டில்
அதில், நாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம். தளபதி 67 டைட்டில் லோடிங் 67% என அறிவித்துள்ளது. அதன்படி தளபதி 67 டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்த அறிவிப்பை பார்த்த விஜய் ரசிகர்கள் செம்ம கொண்டாட்டத்தில் உள்ளனர். விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் தளபதி 67ல் நடிக்கின்றனர். இதனிடையே நாளை டைட்டில் வெளியாகும் போது தளபதி 67 ப்ரோமோவும் வரும் என எதிர்க்கப்படுகிறது.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்?
தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ நேற்று மாலை வெளியானது. அதில், விஜய், லோகேஷ், அர்ஜுன், த்ரிஷா, சாண்டி மாஸ்டர், நடிகர் ஜார்ஜ் மரியன் ஆகியோர் கலந்துகொண்டார். கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கேரக்டரில் ஜார்ஜ் மரியன் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது தளபதி 67 படத்திலும் அவர் கமிட் ஆகியுள்ளதால், இது லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அடுத்தடுத்து தளபதி 67 அப்டேட் வெளியாகி வருவது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

அடுத்து என்ன அப்டேட்?
ஏற்கனவே இன்று தளபதி 67 ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமம் பற்றி படக்குழு அப்டேட் வெளியிட்டிருந்தது. ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் வாங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு தளபதி 67 டைட்டிலும் வெளியாவதாக படக்குழு அறிவித்துவிட்டது. இதனால் அடுத்து வேறென்ன அப்டேட் வரும் என விஜய் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அதேநேரம் மெயின் வில்லனாக யார் நடிக்கிறார் என்ற அறிவிப்பை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











