»   »  தெறி 100 வது நாள்... 'தெறிக்க' விடும் விஜய் ரசிகர்கள்!

தெறி 100 வது நாள்... 'தெறிக்க' விடும் விஜய் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியான தெறி திரைப்படம் இன்று 100 வது நாளை எட்டியுள்ளது.

விஜய்-சமந்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியான 'தெறி' அட்லீக்கு 2 வது வெற்றிப்படமாகவும், இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் படமாகவும் அமைந்துள்ளது.

தெறி 100 வது நாளை விஜய் ரசிகர்கள் போட்டிபோட்டு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் கொண்டாட்ட பதிவுகளில் இருந்து ஒருசில பதிவுகள் இங்கே.

அட்லீ

இன்று என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். விஜய்ணா, கலைப்புலி தாணு மற்றும் என்னுடைய குழுவினருக்கு நன்றிகள் என இயக்குநர் அட்லீ தெரிவித்திருக்கிறார்.

ராதிகா

'வாழ்த்துக்கள் அட்லீ' என நடிகை ராதிகா தனது பங்கிற்கு அட்லீயைப் பாராட்டியிருக்கிறார்.

மகிழ்ச்சி

தெறி 100 வது நாளை எட்டியதில் மகிழ்ச்சி என நிவேதா தாமஸ் சந்தோஷம் காட்டியிருக்கிறார்.

கத்தி

துப்பாக்கி, கத்தி, தெறி என வரிசையாக 3 பிளாக்பஸ்டர் ஹிட்களை விஜய் கொடுத்திருப்பதாக கூறும் ஆலமீன் 'தளபதி வேற லெவல்' என்றும் பாராட்டியிருக்கிறார்.

இளைய தளபதி

இளைய தளபதி, இயக்குநர் அட்லீ இருவருக்கும் வாழ்த்துக்கள் என ஸ்ரீ பாராட்டியிருக்கிறார்.

இதுபோல மேலும் பல ரசிகர்களின் வாழ்த்துக்களால் #Theri100Days ஹெஷ்டேக் இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.

English summary
Vijay Fans Celebrates 'Theri 100 Days' in All Social Networks.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil