»   »  இறுதிக்கட்டத்தை நெருங்கியது விஜய்யின் 'தெறி'

இறுதிக்கட்டத்தை நெருங்கியது விஜய்யின் 'தெறி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, மகேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தெறி.விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடந்து வருகிறது.


இந்நிலையில் தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக படத்தின் நாயகியரில் ஒருவரான எமி ஜாக்சன் தெரிவித்து இருக்கிறார்.


தெறி

தெறி

ராஜா ராணி புகழ் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, மகேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தெறி.விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடந்து வருகிறது.


அதிரடியான சண்டைக்காட்சி

அதிரடியான சண்டைக்காட்சி

சமீபத்தில் விஜய் சமூக விரோதிகளுடன் மோதுவது போன்ற அதிரடியான சண்டைக்காட்சி ஒன்ற இயக்குநர் அட்லீ கோவாவில் படம் பிடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் அதிகமாக அந்த சண்டைக் காட்சியை அட்லீ படம் பிடித்ததாக கூறுகின்றனர்.
10 ம் தேதி கிளைமாக்ஸ்

10 ம் தேதி கிளைமாக்ஸ்

வரும் 10 ம்தேதி தெறி படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சி பெரம்பூர் பின்னி மில்லில் படமாக்கப்படவிருக்கிறது. இந்த சண்டைக் காட்சியில் வில்லன் மகேந்திரன் மற்றும் அவரது அடியாட்களுடன் விஜய் மோதவிருக்கிறார். இதற்காக ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர்கள் வரவழைக்கப் பட்டுள்ளனராம்.
உறுதி செய்த எமி ஜாக்சன்

தெறி படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதை படத்தின் நாயகி எமி ஜாக்சன் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். விஜய், நான் மற்றும் மொத்தப் படக்குழுவினரும் கோவாவில் இருக்கிறோம் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது என்று அவர் கூறியிருக்கிறார்.
விஜய்யும், எமியும்

தெறி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை எமி ஜாக்சனும் போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஏப்ரல் அல்லது அதற்கு முன்னதாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.


English summary
Actress Amy Jackson Wrote on Twitter "Vijay, myself and the whole team are coming to the end of our shooting schedule for #Theri".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil