»   »  யூ சான்றிதழைக் கைப்பற்றுமா விஜய்யின் தெறி?

யூ சான்றிதழைக் கைப்பற்றுமா விஜய்யின் தெறி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்திற்கு யூ சான்றிதழ் கிடைக்குமா? என்னும் கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி.


Vijay's Theri Get U Certificate?

'ராஜா ராணி' புகழ் அட்லீ இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.


இப்படத்தின் டிரெய்லரை 60 லட்சத்திற்கும் அதிகமான பேர் இணையத்தில் பார்த்து ரசித்திருக்கின்றனர். இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை தெறி டிரெய்லர் பெற்றிருக்கிறது.


ஆக்ஷனை மையமாகக்கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்நிலையில் நேற்று இப்படத்தை சென்சார் போர்டுக்கு படக்குழு அனுப்பியுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் தயாராகியிருப்பதால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்க வேண்டும் என்பது படக்குழுவினரின் எண்ணமாக உள்ளது.


ஒருவேளை தமிழக அரசின் வரிவிலக்கை இப்படம் பெறாவிடில் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.


வருகின்ற தமிழ்ப்புத்தாண்டில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.


தெறிக்கு வரிவிலக்கு கிடைக்குமா? பார்க்கலாம்.

English summary
Theri: The Makers Submit the Final Copy to Sensor Board. Will Vijay's Movie Get Tax Exemption? Let's See!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil