»   »  'எனக்கு எல்லாமே ஜோசப் தான்'... விஜய்க்கு சமமாக அசத்திய நைனிகா

'எனக்கு எல்லாமே ஜோசப் தான்'... விஜய்க்கு சமமாக அசத்திய நைனிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று வெளியான தெறி டிரெய்லரில் விஜய்க்கு ஈடாக, மீனாவின் மகள் நைனிகா அசத்தி விட்டார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விஜய்-அட்லீ கூட்டணியில் உருவான தெறி படத்தின் 2 நிமிட டிரெய்லர் நேற்று வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


2 ஹீரோயின்கள் இருந்தபோதிலும் கூட விஜய்யின் மகளாக நடித்திருக்கும் நைனிகா நடிப்பில் அசத்தியிருக்கிறார்.


தெறி டிரெய்லர்

விஜய் 3 வது முறையாக காக்கி மாட்டியிருக்கும் தெறி படத்தின் 2 நிமிட டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. சத்யம் திரையரங்கில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.


3 தோற்றம்

3 தோற்றம்

இந்தப் படத்தில் விஜயகுமார், ஜோசப், தர்மேஸ்வர் என 3 விதமான தோற்றங்களில் விஜய் நடித்திருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், அம்மாவாக ராதிகாவும் நடித்துள்ளனர். விஜய்யின் மகள் நைனிகாவிற்கு ஆசிரியையாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.


11 லட்சம்

11 லட்சம்

தெறி டிரெய்லர் வெளியாகி 14 மணி நேரங்களில் 11,47,643 பார்வைகளை இணையத்தில் கடந்துள்ளது. மேலும் 1,23,969 பேர் இந்த டிரெய்லர் தங்களுக்குப் பிடித்திருப்பதாக லைக் செய்திருக்கின்றனர். அதேபோல இந்த டிரெய்லர் தங்களைக் கவரவில்லை என 9798 பேர் டிஸ்லைக் செய்துள்ளனர்.


மீனாப் பொண்ணு

டிரெய்லரில் மீனாவின் மகள் நைனிகா விஜய்க்கு ஈடாக நடிப்பில் அசதி விட்டார். எனக்கு எல்லாமே ஜோசப் தான் என்று இவர் பேசும் வசனம் விஜய் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து விட்டது. இதனால் விஜய்க்கு ஈடாக நைனிகாகாவிற்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.


பாடல்கள்

இதுபோல படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷின் 50 வது படமாக வெளியாகியிருக்கும் தெறியில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மொத்தத்தில் தெறி டிரெய்லர்+ பாடல்கள் என 2 லட்டுகளைக் கொடுத்து, தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்திருக்கிறார் விஜய்.English summary
Vijay's Theri Trailer Crossed 11 Lakh views in You Tube.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil