»   »  சென்னையில் பிறமொழிப் படங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியது விஜய்யின் 'தெறி'

சென்னையில் பிறமொழிப் படங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியது விஜய்யின் 'தெறி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் வெளியான தெறி சென்னை பாக்ஸ் ஆபீஸில் பிறமொழிப்படங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுதியுள்ளது.

கடந்த 14 ம் தேதி விஜய்-சமந்தா நடிப்பில் வெளியான 'தெறி பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது.


ஏற்கனவே 'பாகுபலி'யின் முதல் வார வசூலை முறியடித்த தெறி தற்போது தெலுங்கு மற்றும் இந்திப்படங்களின் ஆதிக்கத்தை, சென்னை பாக்ஸ் ஆபீஸில் கட்டுப்படுத்தியுள்ளது.


தெறி

தெறி

11 நாட்கள் முடிவில் இப்படம் 6.49 கோடிகளை சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது. விஜய்யின் திரையுலக வரலாற்றில் இதுவரை எந்தப்படமும் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இவ்வளவு தொகையை வசூலித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிவேல்

வெற்றிவேல்

பிரபு, சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'வெற்றிவேல்' 21.76 லட்சங்களுடன் பாக்ஸ் ஆபீஸில் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தி ஜங்கிள் புக்

தி ஜங்கிள் புக்

17.39 லட்சங்களுடன் இந்தியச் சிறுவன் நீல் சேத்தியின் நடிப்பில் வெளியான 'தி ஜங்கிள் புக்' 3 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலும் 3 வாரங்கள் முடிவில் இப்படம் 2.08 கோடிகளை சென்னையில் வசூலித்து சாதனை படைத்துள்ளது.


சரைய்நோடு

சரைய்நோடு

அல்லு அர்ஜுன், கேத்தரின் தெரசா, ராகுல் பிரீத்தி சிங் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'சரைய்நோடு' 11.38 லட்சங்களுடன் 4 வது இடத்தைப் பிடித்துள்ளது. அல்லு அர்ஜுன் ஆக்ஷன் காட்டினாலும் தெறியை மீறி இப்படத்தால் பாக்ஸ் ஆபீஸில் சாதிக்க முடியவில்லை என்பதே உண்மை.
பேன்

பேன்

ஷாரூக்கான் நடிப்பில் வெளியான 'பேன்' 6.38 லட்சங்களுடன் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 5 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தெறி வெளியாவதற்கு முன் 'ஜங்கிள் புக்', 'சர்தார் கப்பர் சிங்' ஆகிய படங்கள் சென்னை பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்நிலையில் 'தெறி' வெளியான பின் பிறமொழிப் படங்களின் ஆதிக்கம், பாக்ஸ் ஆபீஸில் தற்போது குறையத் தொடங்கியிருக்கிறது.


English summary
11 Days End Vijay's Theri Collected 6.49 Crore in Chennai Box Office.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil