விஜய்க்கு இப்படி ஒரு சென்டிமென்ட்டா...தளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட்டிற்கு இது தான் காரணமா?

சென்னை : விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பற்றிய தினம் ஒரு அப்டேட்டை வெளியிட்டு படக்குழுவினர் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். ரசிகர்களும் இந்த படத்தின் அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும் என எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

பீஸ்ட் படத்தின் நிலைமை தளபதி 66 படத்திற்கும் வந்து விடக்கூடாது என்பதில் விஜய் மட்டுமல்ல படக்குழுவும் மிகுந்த கவனத்துடன் உள்ளது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து படக்குழுவினர் செய்து வருகின்றனர். அதே சமயம் விஜய்யின் கோரிக்கை, சென்டிமென்ட் ஆகியவற்றையும் ஏற்றுக் கொண்டு, அதற்கு தகுந்தாற் போல் ஷுட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.

விஜய் வைத்த கோரிக்கை

விஜய் வைத்த கோரிக்கை

முதலில் ஐதராபாத்திலேயே படத்தின் முழு ஷுட்டிங்கையும் நடத்தி முடிக்க திட்டமிட்ட படக்குழுவினர், பெப்சி தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக சென்னையில் ஷுட்டிங்கை நடத்த வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதால், அதற்கும் ஓகே சொல்லி விட்டனர். பாடல்களை மட்டும் ஐதராபாத்தில் எடுத்து விட்டு, படத்தின் காட்சிகளை சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் தான் நடத்த போகிறார்கள்.

 இவங்களும் இருக்காங்களா

இவங்களும் இருக்காங்களா

ஐதராபாத்தில் நடத்தப்பட்டு வந்த ஷுட்டிங் முடிந்து விட்டதாக நேற்று படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவே அப்டேட் வெளியிட்டிருந்தார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் விரைவில் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டாக இரண்டு குழந்தைகள் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்களாம்.

அப்பா ரோலில் நடிக்கிறாரா விஜய்

அப்பா ரோலில் நடிக்கிறாரா விஜய்

இந்த படத்தில் விஜய் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ரோலில் நடிக்கிறாராம். அத்வைத் வினோத் மற்றும் ஹர்சிதா கார்த்திக் ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதை வம்சி பைடபள்ளி போட்டோவுடன் உறுதி செய்துள்ளார். இதில் அத்வைத், பென்குயின் படத்தில் கீர்த்தி சுரேஷின் மகன் ரோலில் நடித்துள்ளார். ஹர்சிதா, விஜய்யின் பீஸ்ட் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.

விஜய்க்கு இப்படி ஒரு சென்டிமென்ட்டா

விஜய்க்கு இப்படி ஒரு சென்டிமென்ட்டா

விஜய் தனது ஒவ்வொரு படத்திலும் குழந்தைகளுடன் ஒரு சீனிலாவது நடிப்பதை தனது சென்டிமென்ட்டாக கடைபிடித்து வருகிறாராம். வரிசையாக விஜய் நடித்த சமீபத்திய படங்களை கவனித்து பார்த்தால் இது உண்மை தான் என்பது புரியும். பீஸ்ட் படத்தில் விஜய் என்ட்ரி ஆகும் சீன் ஒரு சிறு குழந்தைக்கு பலூன் வாங்கி கொடுப்பது தான். அதற்கு பிறகு மாலில் நடக்கும் மாஸ் காட்சிகளுக்கு ஆரம்பமே ஒரு குழந்தையை காப்பாற்றுவது தான்.

அட ஆமாங்க...இத கவனிக்கவேயில்லையே

அட ஆமாங்க...இத கவனிக்கவேயில்லையே

இதற்கு முன் விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் சிறுவர்களுடன் இருக்கும் சீன் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு முன் நடித்த சர்கார், பைரவா, தெறி, மெர்சல் என வரிசையாக அனைத்து படங்களிலும் விஜய் சிறுவர்களுடன் இருக்கும் ஒரு சீன் நிச்சயம் இருக்கும். அதே சென்டிமென்ட்டை தான் தளபதி 66 படத்திலும் வம்சி பைடபள்ளி கைபிடித்துள்ளாராம். இந்த இரண்டு குழந்தை ரோல்கள் வைக்கப்பட்டதற்கு இது தான் முக்கிய காரணமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X