Just In
Don't Miss!
- Lifestyle
உடல் எடையைக் குறைக்க உதவும் ஹாலிவுட் டயட் பற்றி தெரியுமா?
- Sports
காட்டிக் கொடுத்த ஸ்க்ரீன்.. உஷாரான வெ.இண்டீஸ்.. அம்பயரை நோக்கி கோபமாக வந்த கோலி.. பரபர நிமிடங்கள்!
- News
எந்த வேறுபாடும் இல்லை.. இந்தியா முழுக்க மாணவர்களை ஒன்றிணைத்த போராட்டம்.. பல லட்சம் பேர் பங்கேற்பு!
- Automobiles
மஹிந்திரா பலேரோ பிக்-அப் ட்ரக் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டம்...
- Finance
இதில் ஏர்டெல்-க்கு முதலிடம்.. ஜியோக்கு 4-ம் இடம்..! கபாலியாய் திரும்பி வந்த ஏர்டெல்..!
- Technology
தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த ஒரு சீன் போதும்.. 7 ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் துப்பாக்கி கொண்டாடப்படும்!
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், வித்யுத் ஜம்வால் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் இன்றுடன் 7வது ஆண்டை நிறைவு செய்கிறது.
நவம்பர் 13, 2012ம் ஆண்டு வெளியான துப்பாக்கி படம் 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தியளவில் #7YearsofMegaBBThuppakki என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில் நடிகர் விஜய், ஜகதீஷ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
|
மறக்கமுடியுமா
துப்பாக்கி படத்தின் ஒவ்வொரு காட்சியும் தமிழக ரசிகர்கள் நெஞ்சில் மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது. அதிலும், மற்ற பெண்களை காப்பாற்ற தனது தங்கையை பணயம் வைத்து, அனைத்து பெண்களையும் காப்பாற்றும் விஜய்யின் அதிரடி ஆக்ஷன், எந்த காலத்திலும் விஜய்யின் ஃபேவரைட் காட்சிகள் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும். அதேபோல, கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும் பல காட்சிகள் துப்பாக்கி படத்தில் இடம்பெற்றிருக்கும்.
|
ஏ.ஆர். முருகதாஸ்
அஜித்துக்கு தீனா எனும் வெற்றி படத்தை கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் விஜய்க்கு துப்பாக்கி எனும் மெகா பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். கடந்த ஆண்டு மீண்டும் விஜய் நடிப்பில் தீபாவளி சரவெடியாக சர்கார் படத்தை இயக்கி அந்த படத்தையும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடிக்க வைத்தார்.
|
சந்தோஷ் சிவன்
தனக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்வேன் என அடம்பிடிக்கும் அற்புதமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், துப்பாக்கி படத்தில் இணைந்தது படத்தின் பாதி வெற்றியை உறுதி செய்தது.
நடிகர் விஜய்யை அதற்கு முன் கண்டிராத பல வித்தியாசமான கோணங்களிலும் லென்ஸ்களிலும் காட்டி அசத்தினார். கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்யின் கையிலேயே கேமராவை பொருத்தி அவரையும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வைத்து அழகு பார்த்தார் சந்தோஷ் சிவன்.

ஹாரிஷ் ஜெயராஜ்
துப்பாக்கி படத்திற்கு பிறகு இன்னும் அந்த அளவுக்கு ஒரு சூப்பர் ஹிட் ஆல்பம் ஹாரிஷ் ஜெயராஜே போட்டிருப்பாரா என்பது சந்தேகம் தான். கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன், குட்டிப்புலி கூட்டம், அண்டார்டிகா, வெண்ணிலவே, அலைக்க லேக்கா, போய் வரவா என ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு வெரைட்டி காட்டியிருப்பார்.
|
முதல் 100 கோடி
தீபாவளியை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக விஜய்க்கு 100 கோடி கிளப்பை அறிமுகப்படுத்தி வைத்தது ஏ.ஆர். முருகதாஸின் துப்பாக்கி படம் தான். விஜய்யின் மாஸ் மற்றும் கிளாஸ் ஆக்டிங்கை ரசிகர்களுக்கு காட்டிய படமும் துப்பாக்கி தான்.
|
துப்பாக்கி 2
துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு, 7 ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களிடையே நீங்காமல் அந்த படத்தின் அடுத்த பாகம் வெளியாகுமா என்ற ஆர்வமும் வரவேற்பும் தான் காரணம். பிகில் படத்தின் வெளியீட்டு சமயத்தில் கூட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் துப்பாக்கி 2வுக்காக வெயிட் பண்ணுவதாக போட்ட ட்வீட் வைரலானது. 'தளபதி 64' படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி அமைந்தால் அது நிச்சயம் துப்பாக்கி 2வாகத்தான் இருக்கும்.