Don't Miss!
- News
ஒருங்கிணைந்த அதிமுக, இரட்டை இலை சின்னம்.. தமிழ்நாட்டில் நினைத்ததை சாதிக்கும் பாஜக!
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. முக்கியக் கூட்டாளி டோட்டல் எனர்ஜிஸ் அறிக்கை..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்... படக்குழு அதிரடி அறிவிப்பு... விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஹைதராபாத்:
விஜய்
நடித்துள்ள
வாரிசு
திரைப்படம்
பொங்கல்
வெளியீடாக
திரைக்கு
வரவுள்ளது.
வம்ஷி
பைடிபள்ளி
இயக்கத்தில்
தமிழ்,
தெலுங்கு
என
இருமொழிகளில்
வாரிசு
திரைப்படம்
உருவாகியுள்ளது.
விஜய்யுடன்
ராஷ்மிகா
மந்தனா,
சரத்குமார்,
குஷ்பூ,
பிரகாஷ்ராஜ்
உள்ளிட்ட
பலர்
நடித்துள்ள
இந்தப்
படம்
11ம்
தேதி
ரிலீஸ்
என
அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
வாரிசு
படத்தின்
ரிலீஸ்
தேதியில்
திடீரென
மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக
படக்குழு
அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளது.
சூப்பர்ஸ்டார்
விஜய்..
இந்தியாவிலேயே
சிறந்த
டான்சர்..
சீமான்
பேச்சு..
ப்ளூசட்டை
மாறன்
ட்ரோல்!

தமிழ், தெலுங்கில் வாரிசு
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. தில் ராஜூவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. 11ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட வாரிசு படத்தின் டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில். அஜித்தின் துணிவும் 11ம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் வாரிசு என்ற டைட்டிலிலும் தெலுங்கில் வாரிசுடு எனவும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்
முதன்முறையாக் தெலுங்கிலும் விஜய் நேரடியாக அறிமுகமாவதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேநேரம் தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது. முதலில் இந்தப் படத்தை தமிழில் வெளியாகும் அதே 11ம் தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது ஆனால் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், வாரிசுடு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

வாரிசுடு 14ம் தேதி ரிலீஸ்
அதன்படி வாரிசுடு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்துள்ளார். ஆனால் அதேநேரம் தமிழில் திட்டமிட்டபடி 11ம் தேதியே வாரிசு படம் ரிலீசாகும் என்பதையும் அவர் உறுதிசெய்துள்ளார். ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்ற வாரிசுடு படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இதுகுறித்து அறிவித்துள்ளார். இந்த தேதி மாற்றத்திற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

காரணம் என்ன?
ஏற்கனவே பண்டிகை காலங்களில் தெலுங்கில் உருவாகும் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. ஆனால், அதன்பின்னர் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்கள் பொங்கலுக்கு வெளியாவதால், போதுமான் திரையரங்குகள் வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே வாரிசுடு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.