Don't Miss!
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- News
வருது! வருது!.. தமிழ்நாடு டூ ஆந்திரா.. புதிய 6 வழிச்சாலைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
வாரிசு, துணிவு FDFS Box Office ரிப்போர்ட்... விஜய்யை ஓரங்கட்டிய அஜித்... வெறித்தனமான சம்பவம்
சென்னை:
பொங்கல்
பண்டிகையை
முன்னிட்டு
விஜய்யின்
வாரிசு,
அஜித்
நடித்துள்ள
துணிவு
திரைப்படங்கள்
இன்று
ரிலீஸாகியுள்ளன.
இரண்டு
திரைப்படங்களுக்கும்
ரசிகர்களிடம்
அதிக
எதிர்பார்ப்பு
இருந்ததால்
திரையரங்குகள்
திருவிழாக்கோலம்
பூண்டுள்ளது.
அதேபோல்
துணிவு
நள்ளிரவு
1
மணி
காட்சியுடனும்
விஜய்யின்
வாரிசு
அதிகாலை
4
மணி
கட்சியுடனும்
தொடங்கியது.
இரண்டு
திரைப்படங்களின்
FDFS
ரிப்போர்ட்டும்
தற்போது
வெளியாகி
ரசிகர்களை
உற்சாகத்தில்
ஆழ்த்தியுள்ளது.
பீஸ்ட்டே
பரவாயில்லை..
இந்தி
மெகா
சீரியல்..
வாரிசு
படத்தை
கிழித்து
தொங்கவிட்ட
ப்ளூ
சட்டை
மாறன்!

வாரிசு, துணிவு பொங்கல்
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இருதரப்பு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பில் இருந்த இந்தப் படங்களின் FDFS காட்சிகளை ரசிகர்கள் கண்டுகளித்தனர். தொடர்ந்து சில மாதங்களாக ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படங்களின் விமர்சனங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

FDFS வசூல் சாதனை
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு என இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. வாரிசு முழுக்க முழுக்க பேமிலி சென்டிமெண்டலாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதேபோல், அஜித்தின் துணிவு ஆக்ஷன் ஜானரில் இருந்தாலும், சமூகத்துக்கு தேவையான கருத்துகளை எடுத்து வைத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் FDFS வசூல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

துணிவு தான் டாப்
அஜித்தின் துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கே திரையிடப்பட்டது. முதலில் ஒரு மணிக் காட்சிகள் ரத்து செய்யப்படலாம் என சொல்லப்பட்ட நிலையில், இறுதியாக சொன்னபடி வெளியானது. அதன்படி அஜித்தின் துணிவு படத்தின் FDFS வசூல் 12 கோடி ரூபாய் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்களும் துணிவு படக்குழுவினரும் உற்சாகத்தில் உள்ளனர். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வசூல் அஜித்துக்கு கை கொடுக்காத நிலையில், துணிவு கெத்து காட்டியுள்ளது.

விஜய்யின் வாரிசு FDFS வசூல்
அதேபோல், விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. விஜய் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் வெளியான வாரிசு படமும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்தப் படத்தின் FDFS வசூல், 10 கோடி ரூபாய் என தகவல் கிடைத்துள்ளது. அஜித்தின் துணிவு படத்தை விட 2 கோடி ரூபாய் வரை குறைவாக இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் இது சூப்பர் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.