Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி.. அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க கோலம்!
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
டிவிட்டரில் ட்ரெண்டாகும் வாரிசு ஆடியோ லான்ச்... எஸ்கேப் ஆகும் முடிவில் சிம்பு... என்ன காரணம்?
சென்னை: விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகின்றன.
வாரிசு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நாளை மாலை சென்னையில் நடைபெறுகிறது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு விஜய் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனையடுத்து வாரிசு ஆடியோ லான்ச் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வரும் நிலையில், இன்னொரு முக்கியமான தகவலும் கிடைத்துள்ளது.
“வாரிசு“ இசைவெளியீட்டு விழா…டிக்கெட் விலையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள் !

வாரிசு ஆடியோ லான்ச்
விஜய் நடித்துள்ள வாரிசு திரப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார். அதேபோல் அஜித்தின் துணிவு படமும் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. அஜித் வழக்கம் போல துணிவு படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொள்ள மாட்டேன் என அறிவித்துவிட்டார். ஆனால், பொங்கல் ரேஸில் கெத்து காட்ட வேண்டும் என முடிவெடுத்துள்ள விஜய், வாரிசு ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ரெடியாகி வருகிறார். நாளை மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு ஆடியோ லான்ச் நடைபெறுவதாக படக்குழு அறிவித்துவிட்டது.

டிவிட்டரில் ட்ரெண்ட்
மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு விஜய் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளியீடு நடைபெறாமல், சன் டிவியில் நெல்சனுடன் இணைந்து பேட்டி மட்டுமே கொடுத்தார் விஜய். இதனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு வாரிசு ஆடியோ லான்ச்சில் விஜய் பங்கேற்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த இருதினங்களாக "நெஞ்சில் குடியிருக்கும்", "விஜய்யின் குட்டி ஸ்டோரி" என்ற ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது "வாரிசு ஆடியோ லான்ச்" #VarisuAudioLaunch என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது.

அரசியல் பேசுவாரா விஜய்?
வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்ற அறிவிப்பு வந்ததுமே, அந்நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதே பெரிய கேள்வியாகியுள்ளது. பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் அடிக்கடி ரசிகர்களை சந்தித்து வருவதால் வாரிசு ஆடியோ லான்ச்சில் அரசியல் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக வாரிசு படத்தில் இருந்து மொத்தம் மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சிம்பு பாடிய இரண்டாவது சிங்கிளான "தீ இது தளபதி" பாடலும் மாஸ் காட்டியுள்ளது. அதேபோல், இருதினங்களுக்கு முன்னர் ரிலீஸான Soul of Varisu பாடலுக்கும் நல்ல ரீச் கிடைத்துள்ளது.

எஸ்கேப் ஆன சிம்பு
இதனிடையே வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிம்பு இந்நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, இப்போது வெளிநாட்டில் ஓய்வில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் வாரிசு ஆடியோ லான்ச்சில் சிம்பு கலந்துகொள்ள மாட்டார் என சொல்லப்படுகிறது. நாளை நடைபெறும் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் பிரம்மாண்டமாக ரெடியாகி வருகிறது.