Varisu Box Office Prediction: விஜய்யின் வாரிசு படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் எப்படி இருக்கும்?

சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒட்டுமொத்த குடும்பமே கொண்டாடும் அளவுக்கு சென்டிமென்ட், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து மசாலாக்களும் அளவோடு தூவப்பட்டுள்ளதாக பலரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

அதிகாலை 4 மணிக்கே சிறப்பு காட்சி ஆரம்பித்த நிலையில், இன்று முழுவதும் ஏகப்பட்ட ஷோக்கள் வெளியாக உள்ளன. பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலேயே அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை வரை ஹவுஸ்ஃபுல் போர்டுகள் மாட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல் நாள் உலகளவில் வாரிசு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்றும் தமிழ்நாடு அளவு பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி இருக்கும் என வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புகளை இங்கே பார்ப்போம்..

வாரிசு பொங்கல்

வாரிசு பொங்கல்

விஜய் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் நிச்சயம் வாரிசு பொங்கல் என்றே சொல்லலாம். பீஸ்ட் படம் சொதப்பிய அளவுக்கு இல்லாமல் அனைவரும் பார்த்து மகிழும் அளவுக்கு வாரிசு படம் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வாரிசு முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி அதிரடி ஆக்‌ஷனாகவும் கிளைமேக்ஸில் சென்டிமெண்ட் என வழக்கமான கதையை பக்காவாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் வம்சி என பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு ப்ரீ சேல்

தமிழ்நாடு ப்ரீ சேல்

தமிழ்நாட்டில் நேற்று வரை நடைபெற்ற ப்ரீ சேல் டிக்கெட் புக்கிங்கில் வாரிசு படம் அதிகபட்சமாக 8.45 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தியேட்டருக்கு சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டு இன்று பல லட்சம் ரசிகர்கள் படத்தை காண உள்ள நிலையில், அதிக பட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 22 முதல் 25 கோடி வரை முதல் நாள் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் 35 கோடி

உலகளவில் 35 கோடி

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ஃபேமிலி என்டர்டெயினர் படமான வாரிசு படம் முதல் நாள் முடிவில் உலகளவில் 30 முதல் 35 கோடி ரூபாய் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் வாரிசு படத்திற்கு பெரும் வரவேற்பு குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிளாக்பஸ்டர் வேட்டை

பிளாக்பஸ்டர் வேட்டை

இந்த பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் டபுள் பிளாக்பஸ்டர் வேட்டை என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு படங்களுமே மிகப்பெரிய அளவில் டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்த நிலையில், படத்தில் உள்ள குறைகளை தாண்டி ரசிகர்கள் இந்த பொங்கலுக்கு இரு படங்களையும் பார்த்து கொண்டாட போகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X