Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முழுவீச்சில் ரெடியான வாரிசு மேடை... விஜய் கிரீன் சிக்னல் கொடுப்பாரா... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சென்னை:
விஜய்
நடித்துள்ள
வாரிசு
திரைப்படம்
பொங்கலுக்கு
திரையரங்குகளில்
வெளியாகிறது.
இதனிடையே
வாரிசு
படத்தின்
ஆடியோ
வெளியீட்டு
விழா
இன்று
மாலை
சென்னையில்
உள்ள
நேரு
உள்விளையாட்டு
அரங்கில்
நடைபெறுகிறது.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய் பட விழா நடைபெறுவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் சில அப்டேட்டுகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
வெண்ணிலா
கபடி
குழு
பட
நடிகர்
மாயி
சுந்தர்
காலமானார்:
அடுத்தடுத்து
சோகம்...
ரசிகர்கள்
அதிர்ச்சி

ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்
விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி ரிலீஸாகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அதேபோல் அஜித்தின் துணிவும் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. விஜய் - அஜித் படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் ரேஸில் களமிறங்குகின்றன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதனையடுத்து 'வாரிசு ஆடியோ லான்ச்' என்ற ஹேஷ் டேக் தொடர்ந்து இரண்டு நாட்களாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ரெடியான வாரிசு மேடை
மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு விஜய் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு வாரிசு ஆடியோ லான்ச்சில் விஜய் பங்கேற்கவுள்ளதால் கோலிவுட்டே பரபரப்பாகியுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் முழுவீச்சில் ரெடியாகிவிட்டதாம். விஜய், வாரிசு படக்குழுவினர் உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கிரீன் சிக்னல் கிடைக்குமா?
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பாலிவுட் கிங் ஷாருக்கான் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. விஜய்யும் அதற்கேற்றவாறு தனது பட விழாக்களில் அரசியல் பஞ்ச் அடித்து வருகிறார். இதனால் விஜய் அரசியலுக்கு வருவது உறுதிதான் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன. எனவே இதுபற்றி இன்றைய விழாவில் விஜய் பேசுவாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரசிகர்கள் ரியாக்ஷன்
ஒவ்வொருமுறையும் விஜய் அரசியல் என்ட்ரி குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் அதுபற்றி எதுவும் கூறுவதில்லை. ஆனாலும் கண்டிப்பாக விஜய் கிரீன் சிக்னல் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் பாசிட்டிவாக ரியாக்ட் செய்து வருகின்றனர். இன்றும் அதே எதிர்பார்ப்புடன் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்கள் கெத்து காட்டியிருந்தனர். அடுத்து விரைவில் மக்களவை தேர்தலும் வரவிருப்பதால் விஜய்யின் அரசியல் பஞ்ச் என்னவாக இருக்கும் என்ப்தே பெரிய கேள்வியாக உள்ளது.