வெளியானது ரஞ்சிதமே ரஞ்சிதமே தெலுங்கு வெர்ஷன்…. டோலிவுட் ரசிகர்களை ஏமாற்றிய விஜய்!

ஹைதராபாத்: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை படக்குழு உறுதி செய்துள்ளது.

வாரிசு பொங்கல் ரிலீஸை கன்ஃபார்ம் செய்யும் விதமாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் தெலுங்கு வெர்ஷன் டோலிவுட் ரசிகர்களிடம் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

வாரிசு பொங்கல் ரிலீஸ் போஸ்டர்

வாரிசு பொங்கல் ரிலீஸ் போஸ்டர்

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சில கட்டுப்பாடுகளால், வாரிசு சொன்னபடி ரிலீஸாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு எந்த பிரச்சினையும் இல்லையென்றும், ஆந்திரா, தெலங்கானாவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகராக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என, ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இதனால், பொங்கல் ரிலீஸை கன்ஃபார்ம் செய்யும் விதமாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது வாரிசு படக்குழு.

ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் சாதனை

ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் சாதனை

வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகிவிட்டதால், விஜய் ரசிகர்கள் செம்ம ஹேப்பி மோடில் இருக்கின்றனர். மேலும், தற்போது வெளியான புதிய போஸ்டரையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே, நவம்பர் 5ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' வெளியானது. தமன் இசையில் விஜய், மானசி இணைந்து பாடிய இந்தப் பாடலை நெட்டிசன்கள் செம்மையாக ட்ரோல் செய்தனர். ஆனாலும் அதையும் மீறி தற்போது வரை 230 மில்லியன் வீவ்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால், இந்த சாதனையையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஞ்சிதமே ரஞ்சிதமே தெலுங்கு வெர்ஷன்

ரஞ்சிதமே ரஞ்சிதமே தெலுங்கு வெர்ஷன்

தமிழில் தாறுமாறான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் தெலுங்கு வெர்ஷனை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் வெளியானது முதல் இணையத்தில் ட்ரெண்டாகி வந்தாலும் டோலிவுட் ரசிகர்களுக்கு ரொம்பவே ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. தமிழில் விஜய் குரலில் வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே, தெலுங்கிலும் தளபதியின் வாய்ஸில் தெறிக்க விடும் என டோலிவுட் ரசிகர்கள் தேவுடு காத்து வந்தனர். ஆனால், அங்கே விஜய்க்கு பதிலாக அனுராக் குல்கர்னி இந்தப் பாடலை பாடியுள்ளார். இதனால், தெலுங்கில் விஜய்யின் குரலில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை கேட்க நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.

விரைவில் செகண்ட் சிங்கிள்

விரைவில் செகண்ட் சிங்கிள்

ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு ஒட்டுமொத்தமாக தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வாரிசு செகண்ட் சிங்கிளை வெளியிட படக்குழு ரெடியாகிவிட்டது. இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளதாக வெளியான தகவலால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிற ஆரம்பித்துள்ளது. இன்னொருபக்கம் பொங்கல் ரேஸில் இருக்கும் அஜித்தின் துணிவு படத்தில் இருந்தும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு செகண்ட் சிங்கிள், துணிவு முதல் பாடல் இரண்டுமே டிசம்பர் முதல் வாரம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X