Don't Miss!
- News
"சிக்கல் மேல் சிக்கல்!" பெரிய செக் வைக்கும் சர்வதேச நாணய நிதியம்! கையை பிசையும் பாக்! என்ன நடந்தது
- Technology
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- Finance
ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு..!
- Lifestyle
இந்த பிரச்சனை இருக்குறவங்க.. வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதாம்.. உஷாரா இருங்க..
- Automobiles
மத்த நிறுவனங்களை ஒரு வழியாக்க மஹிந்திரா முடிவு பண்ணிருச்சு! புதிய காரின் டீசரை பார்த்து மிரண்டு நிற்கும் டாடா!
- Sports
"பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறாங்க" ஹர்திக்கின் கேப்டன்சி.. ரமீஷ் ராஜா சுவாரஸ்ய கருத்து!
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய்யை தாலாட்டும் சித்ரா... ட்ரெண்டாகும் Soul Of Varisu மூன்றாவது சிங்கிள் கிளிம்ப்ஸ்
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது.
வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
இந்நிலையில், வாரிசு மூன்றாவது பாடல் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அப்டேட் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அட்லீ வீட்டில் நடந்த வாரிசு ஃபங்ஷன்... சர்ப்ரைஸ் கொடுக்க முதல் ஆளாக சென்ற விஜய்!

வாரிசு அப்டேட்
விஜய் நடித்துள்ள வாரிசு திரப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது. அதேபோல் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால், வாரிசு படத்தில் இருந்து அடுத்தடுத்து சில அப்டேட்களை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறது படக்குழு. நேற்று மாலை வாரிசு மூன்றாவது சிங்கிள் குறித்து அப்டேட் கொடுத்திருந்தார் தமன். அதன்படி வாரிசு மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸாகிறது.

வாரிசை தாலாட்டும் சித்ரா
இதுகுறித்து நேற்று ட்வீட் செய்திருந்த தமன், வாரிசு மூன்றாவது பாடல் Soul of Varisu-ஆக இருக்கும் என பதிவிட்டிருந்தார். மேலும், இது விஜய் அண்ணாவின் ஃபேவரைட் பாடல் எனவும், அம்மாவுக்கான பாடல் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அம்மாவை விரும்புவர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம் எனவும் பதிவிட்டு இருந்ததால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதனால் வாரிசு மூன்றாவது பாடலை பாடியது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அதன்படி வாரிசு மூன்றாவது பாடலை சித்ரா பாடியுள்ளார். அதற்கான கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

நெகிழ வைக்கும் சின்ன குயில்
"ஆராரிராரிரோ கேட்குதம்மா" எனத் தொடங்கும் இந்தப் பாடலை சின்ன குயில் சித்ரா நெகிழ வைக்கும் விதத்தில் பாடியுள்ளது, தற்போது வெளியான கிளிம்பிஸில் தெரிகிறது. விவேக் எழுதிய பாடல் வரிகளுக்கு தமன் மெலடியாக மெட்டு போட, அதனை தனது குரலில் உருகி பாடியுள்ளார் சித்ரா. இயல்பாகவே அம்மா பாடல்கள் என்றால் அது சித்ராவின் குரலில் ரசிகர்களிடம் கண்ணீரை வர வைத்துவிடும். இரு தினங்களுக்கு முன்னர் மறைந்த தனது மகள் நந்தனா குறித்தும் உருக்கமாக ட்வீட் செய்திருந்தார் சித்ரா. இந்த நேரத்தில் வாரிசு மூன்றாவது பாடல் வெளியாவது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாரிசு விஜய் - மகள் நந்தனா - சித்ராவின் தாலாட்டு
சித்ராவின் டிவிட்டர் பதிவில், "நீ சொர்க்கத்தில் தேவதைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருப்பாய். வருடங்கள் கடந்தாலும் உனக்கு வயதாவதில்லை. நீ தூரமாக இருந்தபோதிலும் பாதுகாப்பாக இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஐ லவ், மிஸ் யூ. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே நந்தனா" எனக் குறிப்பிட்டிருந்தார். சித்ராவின் மகள் நந்தனா 2011ம் ஆண்டு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், மகள் நந்தனாவின் பிறந்தநாள் தினத்தில் சித்ரா உருக்கமாக ட்விட் செய்திருந்த இரண்டே நாளில், வாரிசு படத்தில் இருந்து அம்மா பாடல் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் வாரிசு படத்தில் விஜய்க்கான தாலாட்டு பாடலாகவும், மறைந்த மகள் நந்தனாவிற்கான நினைவுப் பாடலாகவும் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.