For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விஜய்யை வாரி அரவணைத்த அம்மா... வாரிசு மூன்றாவது சிங்கிளில் உருகிய ரசிகர்கள்

  |

  சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் இருந்து மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
  Soul of Varisu என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சித்ரா பாடியுள்ளார்.
  தமன் இசையில் மெலடியாக வெளியான வாரிசு மூன்றாவது சிங்கிள், விஜய் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

   அட்லீ வீட்டில் நடந்த வாரிசு ஃபங்ஷன்... சர்ப்ரைஸ் கொடுக்க முதல் ஆளாக சென்ற விஜய்! அட்லீ வீட்டில் நடந்த வாரிசு ஃபங்ஷன்... சர்ப்ரைஸ் கொடுக்க முதல் ஆளாக சென்ற விஜய்!

   பொங்கல் வெளியீட்டில் வாரிசு

  பொங்கல் வெளியீட்டில் வாரிசு

  வாரிசு திரப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். தொடர்ச்சியாக ஆக்‌ஷன் ஜானர் படங்களில் நடித்து வந்த விஜய், இதில் ரொம்பவே சென்டிமெண்ட்டான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க ஃபேமிலி ஜானரில் ஃபீல் குட் படமாக இருக்கும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

   வெளியானது 3வது சிங்கிள்

  வெளியானது 3வது சிங்கிள்

  இந்நிலையில், வாரிசு படத்தில் இருந்து மூன்றாவது பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. Soul of Varisu என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடலை சித்ரா பாடியுள்ளார். நேற்றைய டிவிட்டர் பதிவில் Soul of Varisu விஜய் அண்ணாவின் ஃபேவரைட் பாடல் என தமன் பதிவிட்டிருந்தார். ஆனால் தற்போது இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறிவிட்டது. மகனை தேடிய அம்மாவின் தவிப்பும், மகனை கண்டவுடன் அம்மாவிடம் இருந்து வரும் பெருமூச்சும் எப்படி இருக்குமோ, அதுபோன்று பாடல் வரிகளை எழுதியுள்ளார் விவேக். இப்பாடலை கேட்ட ரசிகர்கள் அம்மாவின் அன்பை நினைத்து உருகியுள்ளனர்.

   சின்ன குயில் சித்ராவின் மேஜிக்

  சின்ன குயில் சித்ராவின் மேஜிக்

  "ஆராரிராரிரோ கேட்குதம்மா" என தாலாட்டு போல இந்தப் பாடலை பாடத் தொடங்கும் சித்ரா, அப்படியே அம்மாவாகவே மாறிவிடுகிறார். "நான் கண்ட காயங்கள் போகுதம்மா, நொடியும் மெல்லிசை ஆகுதம்மா. பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா" போன்ற வரிகளும், அதனை சித்ரா பாடிய விதமும் கேட்பவர்களுக்கு சிலிர்ப்பான அனுபவத்தை தருகிறது. மேலும், இந்தப் பாடலின் கிராபிக்ஸ் விஷுவலை பார்க்கும் போது, பல நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் விஜய்யை, அவரது அம்மா வாரி அணைத்து அழைத்து செல்வது போல தெரிகிறது. இதுவே படத்தின் ஒன்லைனாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

   கலவையாக வரும் வாரிசு

  கலவையாக வரும் வாரிசு

  வாரிசு படத்தில் இருந்து முதலில் வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதேபோல், இரண்டாவது சிங்கிளான 'தீ தளபதி' பாடலும் மாஸ் காட்டி வருகிறது. இப்போது மெலடியாக சோல் ஆஃப் வாரிசு வெளியாகி ஹிட் அடித்து வருகிறது. மூன்று பாடல்களும் வெவ்வேறு சூழ்நிலையை பிரதிபலிப்பதால், வாரிசு திரைப்படம் கமர்சியலாக வித்தியாசமான அனுபவத்தை தரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே வாரிசுக்குப் போட்டியாக அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இது முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

  English summary
  Vijay starrer Varisu is release for Pongal. In this case, the third song from Varisu has been released. This song called Soul of Varisu which sounds like Amma's voice has been well received by the fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X