Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய் அண்ணாவின் ஃபேவரைட் பாடல்... வாரிசு 3வது சிங்கிள் அப்டேட் கொடுத்த தமன்
சென்னை:
விஜய்
நடித்துள்ள
வாரிசு
திரைப்படம்
பொங்கலை
முன்னிட்டு
ஜனவரி
12ம்
தேதி
வெளியாகிறது.
வம்ஷி
பைடிபள்ளி
இயக்கியுள்ள
இந்தப்
படம்
தமிழ்,
தெலுங்கு
மொழிகளிலும்
ரிலீஸாகவுள்ளது
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,
வாரிசு
படத்தின்
மூன்றாவது
பாடல்
ரிலீஸ்
தேதி
குறித்து
இசையமைப்பாளர்
தமன்
ட்வீட்
செய்துள்ளார்.
மாஸ்
காட்டப்போகும்
“வாரிசு“
இசை
வெளியீட்டு
விழா..தொகுப்பாளர்
யார்
தெரியுமா?

விஜய்யின் வாரிசு பொங்கல்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள வாரிசு வரும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வாரிசு ரிலீஸாகவுள்ளதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் வாரிசு படத்திற்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதால், ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளது படக்குழு.

மூன்றாவது சிங்கிள் அப்டேட்
வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டன. விஜய் பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் முதலிலும், சிம்பு பாடிய தீ தளபதி பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பும் வெளியானது. இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது 3வது பாடலுக்கான அப்டேட்டை தமன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள தமன், வாரிசு மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என போஸ்டருடன் அறிவித்துள்ளார்.

விஜய் அண்ணா ஃபேவரைட் பாடல்
Soul of Varisu என்ற கேப்ஷனுடன் தமன் கொடுத்துள்ள இந்த அப்டேட்டில், இதுதான் விஜய் அண்ணாவின் ஃபேவரைட் பாடல் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இது அம்மாவுக்கான பாடல் என்றும், அம்மாவை விரும்புவர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம் எனவும் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் மெலடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாரிசு திரைப்படம் குடும்ப சென்டிமெண்ட்டில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால், இந்த அம்மா பாடல் படத்தில் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

வாரிசுக்குப் போட்டியாக துணிவு
வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்திற்குப் போட்டியாக அஜித்தின் துணிவும் ரிலீஸாகிறது. இதனால் இருதரப்பு ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, எஸ்ஜே சூர்யா பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகி பாபு, ஷாம் என மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது. தில் ராஜூ தயாரித்துள்ள வாரிசு, பாக்ஸ் ஆபிஸில் தரமான சாதனை செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.