Varisu: பின் வாங்குற பழக்கமே இல்ல.. மோதி பார்த்துட வேண்டியதுதான்.. வாரிசு ரிலீஸ் தேதி இதுதானா?
சென்னை: வரும் பொங்கலுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருப்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.
தோழா, மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் பூந்தமல்லி அருகே இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது..
இந்நிலையில், வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

விஜய்யின் வாரிசு
பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் வாரிசு. டோலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு இந்த முறை நடிகர் விஜய் வாய்ப்புக் கொடுத்துள்ளார். தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அதன் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

நட்சத்திர பட்டாளம்
ஆக்ஷன், காமெடி, ஃபேமிலி டிராமா என இந்த முறை குடும்ப ரசிகர்களை டார்கெட் செய்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, ஷாம், சங்கீதா, பிக் பாஸ் சம்யுக்தா என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

தியேட்டர் பிரச்சனை சால்வ்
வாரிசு படத்துக்கு டோலிவுட்டில் தியேட்டர்கள் குறைவாக கிடைக்கும் என கிளம்பிய பிரச்சனைகள் எல்லாமே முடிவுக்கு வந்து விட்டதாகவும் தமிழ்நாட்டிலும் உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல இரு படங்களுக்கும் சரி சமமாகவே தியேட்டர்கள் கிடைக்கும் என வெளியான தகவல்கள் மற்றும் சில பெரிய திரையரங்குகள் வாரிசு படத்தை வெளியிடுவதாக அறிவித்து வரும் நிலையில், ரசிகர்கள் செம ஹேப்பி ஆகி உள்ளனர்.

வாரிசு ரிலீஸ் தேதி
இந்நிலையில், வாரிசு திரைப்படம் ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளதாக ஹாட்டான அப்டேட்களை நெருங்கிய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. துணிவு படம் வெளியாக உள்ள நிலையில், வாரிசு படம் பொங்கலுக்கே வராமல் குடியரசு தினத்துக்கு தள்ளிப் போகும் என்றெல்லாம் கிளப்பி விடப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வியாழக்கிழமை படம் வெளியாகும் என உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணிவு ரிலீஸ் அப்போ
ஜனவரி 11 அல்லது ஜனவரி 13ம் தேதி அஜித்தின் துணிவு படம் வெளியாகுமா? என்கிற கேள்வியும் சமூக வலைதளத்தில் தற்போது வெளியாகி உள்ளன. அஜித், விஜய் படங்கள் வரும் பொங்கலுக்கு கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இரண்டு படங்களுமே நல்ல கலெக்ஷன் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications