சிம்புவின் தரமான சம்பவம் ‘’தீ இது தளபதி“..வாரிசு 2வது பாடலை கொண்டாடும் ஃபேன்ஸ்!

சென்னை : வாரிசு படத்தின் இரண்டாம் பாடலான 'தீ தளபதி' பாடலை இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர் என பெயர் எடுத்தவர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் தளபதியாக இடம்பிடித்திருப்பவர் விஜய்.

நடிகராக நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷனையும் பெற்று விடும்.

வாரிசு

வாரிசு

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு தெலுங்கில் வாரிசுடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தீவிர ரசிகை ராஷ்மிகா மத்தானா இத்திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் சென்டிமெண்ட் படம் எனக்கூறப்படுகிறது.

‘தீ தளபதி‘ சிம்புவின் குரலில் மாஸ்

‘தீ தளபதி‘ சிம்புவின் குரலில் மாஸ்

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'தீ தளபதி' பாடல் வெளியாகி உள்ளது. விஜய்க்காக சிம்பு பாடிய இந்த மாஸ் பாடலை விவேக் எழுதியுள்ளார். விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைத்திருக்கும் தமன், சரமான சம்பவத்தை செய்துவிட்டார் என விஜய் ரசிகர்கள் சிம்பு மற்றும் தமனை புகழ்ந்து வருகின்றனர்.

30 ஆண்டு திரைப்பயணம்

30 ஆண்டு திரைப்பயணம்

விஜய் நடித்த நாளைய தீர்ப்பு படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை நிலையில், விஜய்யின் 30 ஆண்டு திரைத்துறை பயணத்தை கொண்டாடும வகையில் வாரிசு படத்தின் தீ தளபதி பாடரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. சற்று இணையத்தில் வெளியாகி உள்ள இந்த பாடல் அதற்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் கடந்துவிட்டது.

ஆட்டம் பாட்டம் ஆரவாரம்

ஆட்டம் பாட்டம் ஆரவாரம்

மதுரையில் உள்ள அனுப்பானடி பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் இங்கு கூடினர். இதையடுத்து, வாரிசு படத்தின் இரண்டாவதுப பாடல் திரையில் ஒளிபரப்பானதும், திரையரங்குக்குள் ஆட்டம் பாட்டம் விசில் அடித்து ஆரவாரத்துடன் பாடல்களை கண்டு மகிழ்கின்றனர்.

ரஞ்சிதமே ரஞ்சிமே

ரஞ்சிதமே ரஞ்சிமே

வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் இதுவரை 75 மில்லியன் பார்வைகளை பெற்று யூடியூப்பில் நம்பர் 1 பாடலாக வளம் வருகிறது. தமிழில் இப்பாடலை விஜய் பாடிய நிலையில், தெலுங்கில் இந்தபாடலை ராமஜோகையா சாஸ்திரி எழுதி, அனுராக் குல்கர்னி, மானசி ஆகியோர் பாடியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X