Don't Miss!
- News
அசீம் என்னுடைய அக்கா மகனா.. பொய் சொல்கிறார். வீடியோ போட்டு மறுத்த நாகை எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்
- Technology
பிப்ரவரி 7-வரை எந்த ஸ்மார்ட் டிவியும் வாங்காதீங்க: ஏனெனில் வருகிறது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.!
- Lifestyle
உங்க முதலாளியிடம் இந்த அறிகுறிகள் இருந்தா... நீங்க ரொம்ப பாக்கியசாலியாம்... ஏன் தெரியுமா?
- Finance
என் இதயே கனத்து விட்டது.. 8 மாத கர்ப்பிணி பெண் கூகுள் பணி நீக்கம் குறித்து கலக்கம்.. !
- Sports
பாபர் அசாம் ஓரமா போங்க.. உலக சாதனையை தனதாக்கிய சுப்மன் கில்.. வெறும் 21 இன்னிங்ஸ்களில் ரெக்கார்ட்!
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
வாரிசு படத்தோட மொத்த பட்ஜெட்டும் சம்பளம் மட்டும் தான் போல... கோடிகளை அள்ளிய முன்னணி நடிகர்கள்
சென்னை:
விஜய்
நடித்துள்ள
வாரிசு
திரைப்படம்
வரும்
11ம்
தேதி
திரையரங்குகளில்
வெளியாகிறது.
வம்ஷி
பைடிபள்ளி
இயக்கத்தில்
தமிழ்,
தெலுங்கு
மொழிகளில்
உருவாகியுள்ள
இந்தப்
படத்தை
தில்
ராஜூ
தயாரித்துள்ளார்.
விஜய்யுடன்
மிகப்
பெரிய
நட்சத்திரப்
பட்டாளமே
நடித்துள்ள
வாரிசு
படத்திற்கு
தமன்
இசையமைத்துள்ளார்.
இந்நிலையில்
இந்தப்
படத்தில்
நடித்த
நடிகர்கள்,
நடிகைகளின்
சம்பளம்
குறித்து
தகவல்கள்
கிடைத்துள்ளன.
சூப்பர்ஸ்டார்
விஜய்..
இந்தியாவிலேயே
சிறந்த
டான்சர்..
சீமான்
பேச்சு..
ப்ளூசட்டை
மாறன்
ட்ரோல்!

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வாரிசு
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது. அதேநாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டில் எது மாஸ் காட்டும் என பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள வாரிசு, நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றே சொல்லப்படுகிறது.

வாரிசு நடிகர்களின் சம்பளம்
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள வாரிசு படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார், தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதில் விஜய்க்கு மட்டுமே 110 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதேபோல் ராஷ்மிகா மந்தனாவுக்கு 4 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இவர்கள் இருவரையும் தவிர மற்ற நடிகர்கள், நடிகைகளின் சம்பள விவரங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சரத்குமார், பிரபு சம்பளம்
வாரிசு படத்தில் விஜய்யின் அப்பா கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார். முதன்முறையாக விஜய்யுடன் சரத்குமார் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு ட்ரெய்லரிலேயே சரத்குமாரின் கேரக்டர் பற்றி லீட் இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக சரத்குமார் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். இன்னொரு முக்கியமான கேரக்டரில் பிரபு நடித்துள்ளார். ஆனால், அவரது கேரக்டர் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அவருக்கும் 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வில்லனாக பிரகாஷ்ராஜ்
வாரிசு படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே இதனை பிரகாஷ் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கில்லி, சிவகாசி படங்களுக்குப் பிறகு விஜய் - பிரகாஷ்ராஜ் கூட்டணி தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாரிசு படத்தில் நடித்ததற்காக பிரகாஷ் ராஜுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம்.

ஷாம், குஷ்பு சம்பளம்
அதேபோல் வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணனாக நடித்துள்ள ஷாம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஷாமிற்கு கம்பேக் கொடுக்கும் படமாக வாரிசு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய்க்கு இன்னொரு அண்ணனாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குஷ்பூவுக்கு 40 லட்சமும் யோகி பாபுவுக்கு 35 லட்சமும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். விஜய்யின் அம்மாவாக நடித்துள்ள ஜெயசுதாவுக்கு 30 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதவிர இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டவர்களின் சம்பளமும் கோடிகளில் வழங்கப்பட்டுள்ளதாம். அதன்படி பார்த்தால் படத்தின் பட்ஜெட்டில் பாதி சம்பளமாகவே போயிருக்குமே என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.