twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷுட்டிங் முடியும் முன்பே வியாபாரத்தை துவக்கிய வாரிசு டீம்...ஆச்சரியத்தில் ரசிகர்கள்

    |

    சென்னை : டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'வாரிசு'படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Vijays Varisu starts pre release business with crores before the shooting wrapped

    விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'வாரிசு' படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதால் இந்த படத்திற்கு மற்ற விஜய் படங்களை விட மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பலர் நடித்து வரும் இந்த படத்தில் லேட்டஸ்டாக எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க விஜய் தான் டைரக்டர் வம்சியிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.

    இப்பவும் சொல்றேன் வலிமை சுமாரான படம் தான்..சீரியல் நடிகை ஸ்ரீநிதி மீண்டும் சர்ச்சை பேச்சு !இப்பவும் சொல்றேன் வலிமை சுமாரான படம் தான்..சீரியல் நடிகை ஸ்ரீநிதி மீண்டும் சர்ச்சை பேச்சு !

    வாரிசு படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் என்றும், இந்த படத்தை முடித்த பிறகு ஒரு மாதம் பிரேக் எடுத்துக் கொண்டு அக்டோபர் மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க போகிறார் என்றும் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.

    வாரிசு படத்தில் இன்னும் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் மீதமிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    முதல்கட்டமாக இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை வியாபாரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஓடிடி ரிலீஸ் உரிமை 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது என்றும், அதேபோன்று சாட்டிலைட் உரிமையை ரூ 65 கோடி வியாபாரம் ஆகியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது தவிர இந்தி உரிமை தனி வியாபாரம் நடைபெற்று வருகிறதாம்.

    விஜய்யின் சம்பளம் உள்பட 'வாரிசு' திரைப்படத்தின் பட்ஜெட் 200 கோடி என்று கூறப்படும் நிலையில் இந்த பட்ஜெட்டை ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையிலேயே தயாரிப்பாளர் எடுத்து விட்டதாகவும் தியேட்டர்களில் ரிலீஸாகும் அனைத்துமே அவருக்கு லாபம் என்றும் கூறப்பட்டு வருகிறது. 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே வியாபாரம் தொடங்கி விட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Vijay's Varisu team starts the business of the movie before shooting wrapped. According sources, Varisu ott rights was sold to 100 crore and satellite rights sold to 65 core. Varisu total budget including Vijay's salary was 200 cr. But now team recovers the total budget in pre release business.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X