Don't Miss!
- News
நாளையுடன் முடிகிறது அவகாசம்.. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைந்துள்ளதா? செக் பண்ணுவது எப்படி?
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Sports
ஹர்திக் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது.. இளம் வீரர்கள் செய்யும் மெகா தவறு.. கவுதம் கம்பீர் பேட்டி
- Lifestyle
Today Rasi Palan 30 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Varisu Trailer: இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.. வாரிசு ட்ரெய்லர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: அஜித்தின் துணிவு படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31ம் தேதி வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், நாளை மாலை நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புத்தாண்டு ட்ரீட்டாக விஜய் ரசிகர்களுக்கு வாரிசு ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்றே தாமதம் ஆனாலும், நாளை தரமான சம்பவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு படத்தின் ரன் டைம், ட்ரெய்லர் டைம் எல்லாமே குறைவாக இருந்த நிலையில், வாரிசு படத்தின் ரன் டைம் மற்றும் ட்ரெய்லர் டைம் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர்.
துணிவு கிளைமேக்ஸ் இதுதானா.. அப்படி மட்டும் இருந்தா செத்துருவேன் ஜமுனான்னு பங்கம் பண்றாங்களே!

வாரிசு ட்ரெய்லர் எப்போ
தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரபு, குஷ்பு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அந்த படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சன் டிவி யூடியூபில்
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் வெளியான நிலையில், வாரிசு படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் என அனைத்தையுமே சன் டிவி பெரிய தொகைக்கு வாங்கி உள்ளது. இந்நிலையில், நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள ட்ரெய்லரும் சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட் கூட இல்லை
அஜித்தின் துணிவு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளை ம்யூட் செய்த பின்னர் தணிக்கை குழுவினர் வழங்கி உள்ளனர். ஆனால், விஜய்யின் வாரிசு படத்திற்கு ஒரு கட் கூட இல்லை என்றும் யு சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த பயம்
துணிவு ட்ரெய்லர் பார்த்து பயந்து விட்டுத் தான் வாரிசு ட்ரெய்லரை மீண்டும் எடிட் செய்து நாளை வெளியிடுகின்றனர் என அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதே நேரம் நாளைக்கு எல்லா சாதனைகளையும் வாரிசு படம் எப்படி அடித்து நொறுக்குதுன்னு மட்டும் பாருங்க என அஜித் ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்கள் சவால் விட்டு வருகின்றனர்.

ரிலீஸ் தேதி சொல்லுவாங்களா
துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையிலும், அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், வாரிசு ட்ரெய்லர் இறுதியில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஜனவரி 11ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய துணிவு படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் வாரிசு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.