»   »  விஜய்யின் வில்லனுக்கு ஷூட்டிங்கில் காயம்.. தலையில் பலத்த அடி!

விஜய்யின் வில்லனுக்கு ஷூட்டிங்கில் காயம்.. தலையில் பலத்த அடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : அஜித்தின் 'பில்லா 2' படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் வித்யுத் ஜம்வால். அதைத் தொடர்ந்து விஜய்யின் 'துப்பாக்கி', சூர்யாவின் 'அஞ்சான்' ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் தற்போது 'ஜங்லி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் அதிபயங்கர ஸ்டன்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.

ஷூட்டிங்கின்போது இவருக்கு தலையில் அடிப்பட்டு இரத்தம் வந்துள்ளது. உடனே படக்குழுவினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

துப்பாக்கி வில்லன்

துப்பாக்கி வில்லன்

'பில்லா 2', 'துப்பாக்கி', 'அஞ்சான்' ஆகிய படங்களில் நடித்தவர் இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால். இவர் பாலிவுட்டில் தற்போது நடித்து வருகிறார். 'துப்பாக்கி' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த இவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

யானைக்கும் மனிதனுக்குமான நட்பு

யானைக்கும் மனிதனுக்குமான நட்பு

மிக்ஸ்டு மார்ஸியல் ஆர்ட்ஸ் கலைஞராக இருக்கும் வித்யுத் ஜம்வால் தற்போது 'ஜங்லி' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். யானைக்கும் யானை வளர்க்கும் இளைஞருக்கும் இடையேயான நட்பை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம், முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தலையில் காயம்

தலையில் காயம்

வித்யுத் ஜம்வால் சண்டைக் காட்சிகளுக்கு டூப் இல்லாமல் தானே நடித்து வருகிறார். இந்நிலையில் 'ஜங்லி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. 'ஜங்லி' படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளைப் படம்பிடிக்கும் போது, வித்யூத் ஜம்வாலுக்கு தலையில் பலமாக அடிபட்டுள்ளது.

மீண்டும் ஷூட்டிங்கில்

இதனைத் தொடர்ந்து, காயம் குணமடையும் வரை படப்பிடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுத்தார் நடிகர் வித்யுத் ஜம்வால். பிறகு, சிகிச்சை முடிந்து வித்யுத் 'ஜங்லி' படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார்.

English summary
Vidyut Jamwal has acted in Ajith's 'Billa 2', Vijay's 'Thuppakki' and Suriya's 'Anjaan'. Vidyut jamwal gets injured while pulling off a stunt on the sets of 'Junglee' movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil