விஜய் சேதுபதி கொடுத்த சிக்னல்… தளபதி 67-ல் விஜய்க்கு வில்லன் இல்லை... முடிவை மாற்றிய மிஷ்கின்!
சென்னை: மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வரும் மிஷ்கின், தளபதி 67 திரைப்படத்திலும் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கும் தளபதி 67ல் மிஷ்கின் வில்லன் கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

வில்லன் அவதாரத்தில் மிஷ்கின்
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என தரமான படங்களை இயக்கியுள்ள மிஷ்கின் நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிஷ்கினின் கேரக்டரும் அவரது நடிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் மாவீர்ன் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் மிஷ்கின். இதனால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக மிஷ்கின் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் மிஷ்கினும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

விஜய் சேதுபதியின் சிக்னல்
தளபதி 67 படத்தில் மிஷ்கின் வில்லனாக நடிக்கலாம் என்ற செய்திகள் வைரலாகி வந்த நிலையில், தற்போது புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, மிஷ்கின் விஜய்க்கு வில்லனாக நடிக்கவில்லையாம், அதற்கு காரணம் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தான் என சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடித்துள்ளார். அப்போது விஜய் சேதுபதிக்கு மிஷ்கின் ஒரு கதை கூறி இருந்தாராம்.

மிஷ்கின் புது முடிவு
இப்போது அந்தப் படத்தை தொடங்கலாம் என மிஷ்கினுக்கு விஜய் சேதுபதி சிக்னல் கொடுத்துள்ளார். அதனால் உடனடியாக விஜய் சேதுபதியிடம் கூறிய கதையை முழுமையாக தயார் செய்து வருகிறாராம் மிஷ்கின். விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு அவரது வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளாராம். இந்தப் படத்திற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் ஜனவரியில் இருந்து தொடங்கவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

தளபதி 67 படத்துக்கு நோ
விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்தில், விஜய்க்கு வில்லனாக மிஷ்கின் நடிப்பது சந்தேகமே எனக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தளபதி 67ல் மிஷ்கின் நடிப்பதையே படக்குழு இன்னும் உறுதி செய்யாத நிலையில், அடுத்தடுத்து வரும் அப்டேட்கள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் விரைவில் இது எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











