Don't Miss!
- Technology
புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் அதிரடி காட்டும் Netflix: என்னென்ன அம்சங்கள்.!
- News
பாஜக கூட்டணிக்கு அதிமுக இபிஎஸ் அணி குட்பை? அண்ணாமலை சந்திப்பு வேஸ்ட்? வெளுத்து கட்டிய பொன்னையன்!
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Finance
3 அதானி குழும பங்குகள் மீது கூடுதல் கண்காணிப்பு.. NSE அறிவிப்பு..!
- Sports
"இந்தியா அநியாயமாக நடந்துக்கொண்டது" ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அரண்மனை 4ல் விஜய்சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா? சந்தானத்துக்கு எவ்வளவு தெரியுமா?
சென்னை: சுந்தர் சி இயக்கி நடிக்க உள்ள அரண்மனை 4 படத்தில் விஜய்சேதுபதி மற்றும் சந்தானம் இணைந்து நடிக்க உள்ளனர். இந்நிலையில், அந்த படத்திற்காக அவர்கள் இருவரும் வாங்கப் போகும் சம்பளம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
அரண்மனை திரைப்படத்தின் அடுத்த பாகத்தை கையில் எடுத்து இருக்கிறார் இயக்குநரும் நடிகருமான சுந்தர். சி.
அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், ஆர்யா நடித்த 3ம் பாகம் சரியாக போகவில்லை. இந்நிலையில், அரண்மனை 4ம் பாகத்தை பிரம்மாண்டமாக எடுக்க சுந்தர். சி திட்டமிட்டுள்ளாராம்.
அந்த ஷாட்ல உண்மையாவே அஜித் அடிச்சாரு.. துணிவு படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ஜிஎ.ம் சுந்தர்!

ஹன்சிகா பேயாக
சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ஹன்சிகா பேயாக நடித்திருப்பார். வினய் முதல் பாகத்தில் ஹீரோவாகவும், இரண்டாம் பாகத்தில் சித்தார்த் ஹீரோவாகவும் நடித்திருப்பார்கள். இரண்டாம் பாகத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார். சந்திரமுகி பாணியில் பேய் பிடிப்பதும் பேயை ஓட்டுவதற்கான வேலைகளை இயக்குநர் சுந்தர். சி களமிறங்கி செய்வதுமாகவே இந்த படங்கள் எடுக்கப்பட்டு இருந்தன.

சந்தானம் காமெடி
அரண்மனை படத்தில் திருடனாக வீட்டிற்குள் வந்து சந்தானம் செய்யும் காமெடி காட்சிகள் ரசிகர்களை கலகலப்பாக்கி இருக்கும். அரண்மனை 3ம் பாகத்தில் யோகி பாபு செய்யும் காமெடிகள் பெரிதளவில் வொர்க்கவுட் ஆகவில்லை. இந்நிலையில், 4ம் பாகத்தில் மீண்டும் சந்தானம் காமெடியனாக களமிறங்க போவதாக கூறுகின்றனர். காமெடியனா அல்லது இன்னொரு ஹீரோவா என்பது படம் வெளியானால் தான் தெரிய வரும்.

விஜய்சேதுபதி ஹீரோ
பீட்ஸா எனும் ஹாரர் படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஜய்சேதுபதி அனபெல் சேதுபதி, பிசாசு 2 உள்ளிட்ட பேய் படங்களில் நடித்துள்ள நிலையில், அடுத்ததாக அரண்மனை 4ம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். சமீபத்தில் சுந்தர் சி மற்றும் சந்தானத்தின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அரண்மனை 4ம் பாகத்தில் நடிக்கப் போவதை உறுதிப்படுத்தி இருந்தார் விஜய்சேதுபதி.

40 நாட்கள் கால்ஷீட்
மற்ற படங்களை ஒதுக்கி வைத்து விட்டு சுந்தர் சியின் அரண்மனை 4ம் பாகத்திற்காக ஒட்டுமொத்தமாக 40 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளார் விஜய்சேதுபதி என தகவல்கள் வெளியாகி உள்ளன. 60 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தை சுந்தர் சி இயக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

விஜய்சேதுபதி சம்பளம்
அரண்மனை 4ம் பாகத்தில் அதிரடியாக ஒட்டுமொத்தமாக 40 நாட்களையும் ஒதுக்கி நடிக்க ஒப்புக் கொண்டுள்ள விஜய்சேதுபதிக்கு 20 முதல் 25 கோடி வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட் படங்களில் நடிக்க விஜய்சேதுபதி 35 கோடிக்கும் மேல் வாங்கி வரும் நிலையில், தமிழ் படத்துக்கு ஏற்றவாறு தனது சம்பளத்தை வாங்கி வருகிறார் விஜய்சேதுபதி.

சந்தானத்துக்கு இத்தனை கோடியா
ஹீரோவாக நடித்து வந்த சந்தானம் மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் காமெடியனாக நடிக்க உள்ள நிலையில், அவருக்கு 7 முதல் 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித்தின் ஏகே 62 படத்திலும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். மீண்டும் காமெடியனாக நடிக்க சந்தானம் வந்த நிலையில், பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவரை அணுகி வருவதாக கூறுகின்றனர்.